24 special

கடல் கடந்து கலக்கும் சனாதன தர்மம்.. பிரான்ஸ் நாட்டில் நம்ம முருகனின் வேல் செய்யும் அற்புதத்தை பாருங்கள்...

MURUGAN
MURUGAN

ஹிந்து மதம் என்றாலே அதை பல வகையான கடவுள்கள் பின்பற்றப்பட்டு வரப்படும் ஒரு மதமாகவே இருந்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமாக பின்பற்றப்படும் கடவுள்களில் ஒருவராக முருகன் இருந்து வருகிறார். இந்த முருகப்பெருமை ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் தோன்றி பூமியில் வாழ்ந்து வந்த ஒரு மனிதராகவே கருதப்படுகிறார். எனவேதான் முருகனே வழிபடும் பக்தர்கள் எம் பாட்டன்!! என் முப்பாட்டன்!! என்பது போல வார்த்தைகளை முருகனை வைத்து கூறி வருகின்றன. மேலும் தமிழினை வடிவமைத்த கடவுள் இவர்தான் என்று புராணங்கள் கூறுகிறது. இவர் பூமியில் தோன்றி கிட்டத்தட்ட 4000 வருடம் வரையிலும் என்னை குன்றாமல் வாழ்ந்து வந்துள்ளார். எனவே தான் இவரை குமரன் என்றும் போற்றுகின்றனர். பொதுவாக முருக பெருமான் என்றாலே வேல் இல்லாமல் இருக்க மாட்டார்.


எந்த கோவிலுக்கு சென்றாலும் அவர் கையில் வேலினை பிடித்தவரே பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த வேல் முருகனிடம் வந்ததற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு தெரியுமா??இந்து சமயத்தின் புராணங்களின் படி பார்வதி தேவி அவரின் சக்தி முழுவதையும் ஒரு வேலுக்குள் அடக்கி சூரபதுமனை அளிப்பதற்காக முருகப்பெருமானிடம் கொடுத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஸ்கந்த புராணத்திலும் முருகன் இந்த வேலை பயன்படுத்தி தான் சூரபதுமனை கொன்றதாக கூறப்படுகிறது. அப்போது சூரபதுமன்  ஒரு பெரிய மரமாக மாறிவிடுகிறார். எனினும் முருகன் மரத்தை நோக்கி தனது வேலினை செலுத்தி மரம் இரண்டாகப் பிளந்து ஒரு பக்கம் சேவலாகவும், மறுபக்கம் மயிலாகவும் மாறிவிடுகிறது. சேவல் என்னை தனது கொடியாக பயன்படுத்திக் கொண்டு, மயிலினை வாகனமாக மாற்றிக் கொள்கிறார் என புராணங்கள் கூறி வருகிறது. 

 இத்தகைய வரலாற்று பின்னணி உடைய இந்த வேல் வீரத்தின் சின்னமாகவும், கொடியவர்களையும், தீமை தரக்கூடிய விஷயங்களையும் அளித்து நல்லவர்களையும், நன்மை தரக்கூடிய விஷயங்களையும் காக்கும் சக்தி உடையது என்ற நம்பிக்கை எப்போதுமே இந்து மதத்தில் நிலவி வருகிறது!! இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்தியாவில் மட்டுமே தமிழ் கடவுள் ஆன முருகனையும் அவரின் வேல் ஆகியவற்றை பின்பற்றும் பக்தர்கள் இருப்பார்கள் என்று பார்த்தால் தற்பொழுது பிரான்ஸ் நாட்டிலும் முருகனின் வேல் குறித்த சிறப்புகளை விவரிக்கும் அளவிற்கு ஒரு பெண்மணி பேசி வருகிறார்!! அது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! மேலும் அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பது என்னவென்றால்...

அவர் ஒரு வேலினை கையில் வைத்துக்கொண்டு இந்த வேல் ஐ தினம்தோறும் மெடிடேஷன் செய்யும் பொழுது பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்றும், மேலும் வெளியில் செல்லும் பொழுது சிறிய அளவிலான வேல் ஒன்றினை எடுத்துக்காட்டி  இந்த மேலானது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், தீமையிலிருந்து பாதுகாக்க கூடியது என்றும் மேலும் எங்கு சென்றாலும் இந்த வேல் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவரை கூறியுள்ளார் என கூறியுள்ளார். ஆண்கள் அவர்களின் வாலெட், பெண்கள் அவர்களின் பர்ஸ்  போன்றவற்றில் வைத்து இங்கு சென்றாலும் எடுத்து கொண்டு போகலாம். 

மேலும் நானும் எங்கு சென்றாலும் இந்த வேலை கையில் வைத்துக் கொண்டுதான் போவேன். இதனால் நெகட்டிவிட்டி நம் வாழ்க்கையில் இருந்து போய்விடும் என்றும், தவறான எண்ணங்கள் நம்மை விட்டு நீங்கும் என கூறினார். மேலும் இந்த மேலானது 24 மணி நேரமும் நம்மிடம் உள்ள தீயவற்றை விளக்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் எனவே இந்த வேலினை எங்க சென்றாலும் எடுத்துக்கொண்டு சென்றாள் கெட்டவர்கள் கூட நம்மிடம் அண்ட மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இதனை பார்க்கும் பொழுது முருகப்பெருமான் தமிழ் கடவுள் மட்டும் இன்றி உலக கடவுள் என்று அனைவரும் போற்றி வருகின்றனர்.