24 special

ஜோபிடனுக்கு அதிர்ச்சி வைத்தியம்..! ரஷ்யாவின் பதிலடி..!

Jo biden , putin
Jo biden , putin

ரஷ்யா : உக்ரைன் ரஷ்யா மோதலை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளன. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அனுமதிமறுத்திருப்பதுடன் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைகொள்கையை கடைபிடித்து வருகிறது.


அடுத்தடுத்த பொருளாதார தடைகள் மற்றும் அமெரிக்க ஆப்களின் (கூகுள் பே ஆப்பிள் பே கூகுள் மேப் மற்றும் இதர செயலிகள் மற்றும் மெக்டொனால்ட் போன்ற நிறுவனங்கள்) செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் ரஷ்யாவை கடும் எரிச்சல் படுத்தியிருந்தது. இதோடு நில்லாத அமெரிக்கா கடந்த வாரம் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விரிவுபடுத்தியது.

இந்நிலையில் இதற்க்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் மற்றும் அவரது மகளான ஆஷ்லே இருவரும் ரஷ்ய நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்வதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. அவர்களுடன் மேலும் 23 பேரை தடைபட்டியலில் இணைத்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் அந்த பட்டியலில் குடியரசுக்கட்சியினரான மிட்ச் மெக்கானெல்,சூசன் காலின்ஸ் ஜனநாயக கட்சியை சேர்ந்த கிறிஸ்டின் கில்லிபிராண்ட் உள்ளிட்ட நான்கு செனட்டர்களையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் நுழைவுத்தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரான்சிஸ் புகுயாமா போன்ற கல்வியாளர்களும் அடங்குவர்.