24 special

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுங்கள்..! டென்ஷனாகும் எம்.எல்.ஏக்கள்..?

Modi,  naveen patnaik
Modi, naveen patnaik

ஒடிசா : ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதள் ஆட்சிநடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேமுதிக அதிமுக கூட்டணியமைத்து ஆட்சியமைத்தபோது பிரதான எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.


அதேபோல பிஜேபி பிஜூஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் பிஜேபி 22 எம்.எல்.ஏக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரதீப்தா நாயக் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனால் பிஜேபி எம்.எல்.ஏக்கள் தங்களது தேசிய தலைவர்களிடம் புதிய எல்.ஓ.பியை தேர்ந்தெடுக்க சொல்லி வலியுறுத்திவருகின்றனர். கலாஹண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிபாட்னா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பிரதீப்தா நாயக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கடும் உடல்நலக்குறைவை தொடர்ந்து குர்கானில் உள்ள மேத்தாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இன்னும் அவர் உடல்நிலை சீராகததை தொடர்ந்து வருகிற ஜூலை 2 அன்று தொடங்கவுள்ள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அவரால் பங்குபெற முடியாது. அதற்க்கு முன்னதாகவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பிஜேபி எம்.எல்.ஏக்கள். மேலும் மாநில தலைமையும் அதையே விரும்புகிறது.

பிஜேபி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான டெட் கூறுகையில் " எதிர்க்கட்சி தலைவர் இல்லாத காரணத்தால் சபாநாயகருக்கு நோட்டிஸ் கொடுக்காமல் முதல்வரை தவிர யாராலும் பேசமுடியவில்லை. சட்டசபையில் பிஜேபிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. முக்கியமான கூட்டங்களில் எதிர்கட்சித்தலைவரின் கருத்துக்கள் அங்கீகரிக்கப்படும். ஆனால் தலைவர் இல்லாததால் காங்கிரஸ் நாங்களே எதிர்க்கட்சி என கூறிவருகிறது" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.