
அடுத்த வருட சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பம்பரமாக வேளைகளில் இறங்கிவிட்டன. திமுகவுக்கான எதிரான அலை வீச தொடங்கியுள்ளது. மேலும் திமுகவுக்கு எதிரான பலமான கூட்டணி இல்லைஎன்று சொல்லி வந்த நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமை பெற்று வருகிறது. திமுகவுக்கு ஏதிரான அரசியலில் தீவிரமாக களமிறங்கி உள்ளது திமுகவை எதிர்த்து பாஜக ஒருபக்கம் அதிமுக ஒருபக்கம் என தீவிரமாக களமாட தொடங்கிவிட்டது இது ஆளும் தரப்புக்கு மிக பெரும் சவாலாக அமைந்துள்ளது இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு உண்டு செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளது திமுகவும் ஊடகங்களும். தமிழகத்தில் நடக்கும் அராஜகங்களை மக்கள் முன் வைக்காமல் .தினம் தோறும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் செய்திகளும் விவாதங்களும் நடத்தி வருகிறது
இதற்கிடையே தி.மு.க., கூட்டணிக்கு, 120 சட்டசபை தொகுதிகளில் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் 45 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இதனை தொடர்ந்து தான் , 'உடன்பிறப்பே வா' ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், ஆட்சியை தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பொறுப்பாளர்களாக தி.மு.க., தலைமை நியமித்துஉள்ளது.
தொகுதி நிலவரம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்க, 'ஐபேக், பென்' உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.இதில், பென் நிறுவனம் வாயிலாக, தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து, சட்டசபை தொகுதி வாரியாக, இரண்டு மாதங்களாக அலசி ஆராயப்பட்டுள்ளது.
இதில், 120 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி தோல்வி முகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவல், முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.இதையடுத்து, கட்சியின் ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளை, தனித்தனியாக சந்திக்கும் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளார். தி.மு.க., தலைமை அலுவலகமாக, அறிவாலயத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, 'உடன்பிறப்பே வா' என பெயரிடப்பட்டு உள்ளது.
இதுவரை 35க்கும் அதிகமான தொகுதிகளின் நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.தேர்தல் பணிகளில் வேகம் காட்டவில்லை என்றால், தயவு தாட்சண்யமின்றி கட்சி பதவிகளும் பறிக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை, பரமத்தி வேலுார், கவுண்டம்பாளையம், பரமக்குடி, ஸ்ரீரங்கம், குன்னம், ஆர்.கே.நகர், கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதுார், மயிலாப்பூர், தி.நகர், அந்தியூர், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்து உள்ளது.இந்த தொகுதிகள் அனைத்திலும், தி.மு.க., கூட்டணியின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் ஓட்டு வங்கியை பலப்படுத்த, இங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களில், கூடுதல் பயனாளிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார் இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க டெல்லி முடிவெடுத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது, அமித் ஷா வரும் காலங்களில் அடிக்கடி தமிழகம் வர உள்ளாராம். உள்துறை அமைச்சருக்கு இங்கு ஒரு அலுவலகம் அமைக்கவும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாம் இதனால் திமுகவினர் அல்லு இல்லாமல் சுற்றி வருகிறார்கள்.