மஹராஷ்டிரா : நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பத்து தொகுதிகளின் முடிவை அடுத்து சிவசேனா காங்கிரஸ் கூட்டணியாக மஹா விகாஸ் அங்காடி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிரா சட்டப்பேரவை வாக்குப்பதிவு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முடிவுகள் வெளியானதை டஜடர்ந்து மாநில சிவசேனா தலைவரும் நகர்புறத்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. மேலும் அவர் குஜராத் மாநிலத்தில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் ஆட்சியை கலைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என சிவசேனா புலம்பி வருகிறது. அவரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை சிவசேனா மேற்கொண்டுவருகிறது. மேலும் 21 சட்டமன்ற உறுப்பினர்களும் திடீர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் செல்போன் எண்களும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தெரிகிறது.
ஏக்நாத் ஷிண்டே பிஜேபியில் இணைந்து ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறார் என சிவசேனா எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள பிஜேபியின் மூத்த தலைவர் சுதிர் முன்கந்திவர்" ஏக்நாத் ஷிண்டே எங்களுடன் தொடர்பில் இல்லை. நாங்கள் மஹாராஷ்டிராவில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
மகாராஷ்டிராவின் நலன்கருதி தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 2019 அக்டோபர் மாதம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மக்களுக்கு துரோகம் செய்தார். இப்போது அது திரும்பியுள்ளது" என சூசகமாக ஆட்சி கவிழும் என குறிப்பிட்டுள்ளார். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில் " பிஜேபி எங்கள் அரசை கவிழ்க்க சதிவேலை செய்துவருகிறது. நாங்கள் பின்வாங்கமாட்டோம்" என கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் இந்த இக்கட்டான சூழலை சிவசேனா எளிதில் கடந்துவிடும். ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே மாநிலத்தில் இடமில்லை என கூறியுள்ளார்.