ராணுவ வீரராக திரையில் நடிக்க தெரிகிறது ஆனால் சிறப்பான திட்டம் குறித்து வாய் திறக்க முடியாதா என எழுத்தாளர் சமூக வலைத்தளத்தில் எழுப்பிய கேள்வி வைரலாகி வருகிறது, இதுகுறித்து அவர் எழுப்பிய கேள்வி பின்வருமாறு :-
தமிழ்நாட்டில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் ஏன் இசைஅமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் கூட ரசிகர்கள் உண்டு, பெரும் கூட்டம் உண்டு, ஆனால் ஒரு நடிகனாவது நடிகையாவது இயக்குநராவது "அக்னிபாத்" திட்டம் முக்கியமானது.
இளைஞர்கள் பயன்படுத்தி நாட்டையும் வீட்டையும் எங்களையும் காக்கவேண்டும் என கோருகின்றார்களா என்றால் இல்லை, ராணுவ வேடத்தில் நடித்து சம்பாதிப்பது, நிஜத்தில் ராணுவத்துக்கு உதவவேண்டும் என்பதெல்லாம் அப்பட்டமான சந்தர்ப்பவாதம், குள்ளநரிதனம்.
முன்பெல்லாம் தமிழ் திரையுலகம் இப்படி அல்ல, அன்று ராணுவத்துக்கு சாவித்திரி தன் நகைகளை எல்லாம் கழற்றி கொடுத்திருக்கின்றார், இன்னும் எவ்வளவோ நடிகர்கள் அள்ளி கொடுத்திருக்கின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் போரில் தமிழக நடிக கூட்டம் எல்லைக்கு சென்று கலைநிகழ்ச்சி நடத்தி வீரர்களை உற்சாகபடுத்திய காட்சியெல்லாம் உண்டு, அப்படிபட்ட திரையுலகம் இன்று நாட்டுபற்றே இல்லாமல் இப்படி சுயநல கூட்டமாய், அந்நிய சக்திகளின் கூடாரமாய் இருப்பது ஆபத்தானது, இவர்கள் படத்துக்கு வரிவிலக்கு மண்ணாங்கட்டி என இன்னும் சலுகை கொடுப்பதில் அர்த்தமே இல்லை.
நாட்டுக்கு பயன்படாத எத்துறையும் இங்கு அவசியமில்லை, தமிழக மக்கள் இதையெல்லாம் சிந்திப்பார்களா என்றால் ஒரு கூட்டம் "விஜயண்ணா" பிறந்தநாள் ஓலத்தை எழுப்பிகொண்டிருக்கின்றது.
இந்த விசித்திரமான உயிரினங்கள் அண்டார்டிக்காவில் கூட கிடைக்காது என்பதால் இவற்றை அப்படியே பிடித்து மருத்துவ ஆராய்ச்சி கூட்டத்துக்கு அனுப்புதல் நல்லது என்று ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார்.