திமுக கொளுத்திப்போட்ட ஒரு விஷயம் இப்போது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, மொத்த இந்தி பேசும் மாநிலங்களும் திமுக அமைச்சரின் பேச்சால் மீண்டும் பாஜக பக்கம் செல்லும் சூழல் உண்டாகி இருப்பதை அறிந்து காங்கிரஸ் கலக்கத்தில் அல்ல நேரடியாக திமுக தலைமையை தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார், அப்போது பேசியவர் இந்தி மொழி பேசுபவர்கள் குறித்து சர்ச்சையாக பேசினார், அதாவது இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். நீங்கள் நம் மாநிலத்திலும், கோவையிலும் சென்று பாருங்கள். பானி பூரிகளை விற்பர்கள் யார்? இந்தி பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் சர்வதேச மொழி, தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு. யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாதுஎன தெரிவித்து இருந்தார்.
இது தமிழகத்தில் திமுகவிற்கு சாதகமாக மொழி அரசியலாக பார்க்கப்பட்ட சூழலில் இப்போது இந்தி பேசும் மாநிலங்களில் பொன்முடியின் பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அடியை கொடுத்துள்ளது, பல இந்தி மொழி பேசும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நடிகர்கள், அரசியவாதிகள் என ஆம் நாங்கள் பானி பூரி விற்கிறோம், உயர் பொறுப்புகளிலும் இருக்கிறோம் என பானி பூரியுடன் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் மெல்ல மெல்ல இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பரவ தற்போது திமுகவுடன் உறவை முறிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இந்தி மொழி பேசும் அரசியல் தலைவர்கள் நேரடியாக காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பானி பூரி தொழிலார்களும் திமுகவிற்கும் அதன் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக அறிக்கை கொடுக்க தொடங்கியுள்ளனர், இதனால் மிரண்டு போன காங்கிரஸ் தலைமை தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிடம் என்ன நடக்கிறது என தெரியப்படுத்தி இருக்கிறது.
நீங்கள் பேசிவிட்டு செல்கிறீர்கள் அது தமிழகத்தில் உங்களுக்கு சாதகமாக முடிகிறது ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் பானி பூரி விவகாரம் பாஜகவிற்கு சாதகமாக அமைய போகிறது, இப்போதே இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்க தொடங்கி இருக்கிறது, இதே போன்று உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பேசினால் இந்தி பேசும் மாநிலங்கள் மொத்ததமாக பாஜகவிற்கு சாதகமாக முடிய போகிறது என தெரிவித்து இருக்கிறார்களாம்.
இன்னொரு புறம் உண்மையில் பாஜகவை எதிர்ப்பது போல் திமுக நாடகமாடுகிறது, தங்கள் கட்சியை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மீது அமலாக்க துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் மூத்த இரண்டு தலைவர்கள் மீதுள்ள சிபிஐ வழக்கை மீண்டும் நடத்தாமல் இருக்க பாஜகவிற்கு மறைமுகமாக உதவுகிறது திமுக என காங்கிரஸ் சந்தேகிக்கிறதாம்.
இப்போது தேவையில்லாமல் பானி பூரி இந்தி எதிர்ப்பு என பேசி இந்தி மொழி பேசக்கூடிய மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவான சூழலை திமுக உண்டாக்க காரணம் என்ன? நிச்சயம் இதில் திமுகவிற்கு லாபம் இருக்கிறது பாஜகவிற்கு மறைமுகமாக வாக்குகள் செல்ல திமுக உதவுகிறது வெளிப்படையாக பாஜகவை எதிர்ப்பது போல் தமிழகத்திலும் பாஜக வளர திமுக உதவுகிறது.
இப்போது இந்தி மொழி சர்ச்சையை உண்டாக்கி மீண்டும் வலுவாக பாஜகவிற்கு வாக்குகள் திரும்ப திமுக பாஜகவிற்கு உதவுகிறது என வலுவாக நம்புகிறதாம் காங்கிரஸ். இதனை நேரடியாக திமுகவிடம் கேட்க முடியாமல் என்ன செய்வது என விழி பிதுங்கி நிற்கிறதாம் காங்கிரஸ் கட்சி.
அடுத்த பதிவில் திமுக எம்.பி செந்தில்குமாருக்கு தலைமை கொடுத்த டோஸ் குறித்து விரிவாக பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.