
இன்றைய காலங்களில் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதித்து வீடு, நகை, பொருள்கள் போன்றவற்றை வாங்குபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உழைக்காமலேயே எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். யாரோ கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைத்த பணத்தின் மீது எந்த கஷ்டமும் படாத நபர்கள் ஆசை வைக்கின்றனர். இந்தப் பணம் நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு தேவையான எல்லாம் வாங்கி விடலாம் என்று பேராசை கொள்கின்றனர். அவர்களுக்கு மனதில் உழைத்து வாங்க வேண்டும் எந்த பொருளாக இருந்தாலும் என்கின்ற எண்ணமே சிறிதளவு கூட மனதில் இருப்பதே கிடையாது. எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் பணத்துக்கும் பொருளுக்குமே ஆசைப்பட்டு கொண்டிருப்பார்கள். என்னதான் இவர்களிடம் நிறைய பொருட்கள் இருந்தாலும், மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களை பார்க்கும் போது அவர்களின் கண்களை ஈர்க்கிறது. இதனால் எப்படியாவது இந்த பொருளை நாமும் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அவ்வாறு நினைப்பது ஒன்றும் தவறில்லை!! ஆனால் அதனை அவர்களிடமிருந்து திருடி எடுத்து வைத்துக் கொள்வதுதான் தவறு!!ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் அது நமக்கு முதலில் தேவையானதா என்று யோசிக்க வேண்டும். அதன் பிறகு அந்தப் பொருள் தேவை இருந்தால் மட்டுமே அதனை தானாகவே உழைத்து வாங்கிய பணத்தினால் அந்த பொருளை வாங்க வேண்டும். ஆனால் இன்றைய காலங்களில் மற்றவர்களின் பொருள்களின் மீது ஆசைப்படுவது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து அதனை திருடி வைத்துக்கொள்ளும் எண்ணம் உள்ள மனிதர்களும் இன்று உள்ளனர். திருடுவது என்பது தற்போது பலவிதமாக மாறிக்கொண்டே வருகிறது. சிலர் பார்ப்பதற்கு நாகரீகம் உள்ளவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர்.
இவ்வாறு திருடுவதை தடுப்பதற்காக காவல்துறைகளும் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றனர். தற்போது திருடுவது என்பது நேரடியாக இல்லாமல் கூட மொபைல் மூலமாகவும் நடந்து வருகிறது. மற்றவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடுவது, ஏதாவது ஒரு பெயரினை வைத்து கட்டணம் வசூலிப்பது போல பொய்யாக மக்களிடம் பணம் வாங்குவது போன்ற பல திருட்டு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதை செய்திகளில் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். இவ்வாறு நடப்பதை தடுப்பதற்காக காவல்துறை சைபர் கிரைம் என்ற தனிப்பட்ட துறையையும் இதற்கெனவே நடத்தி வருகிறது. இப்படி திருடுவதில் புதுப்புது முறைகள் மாறிக்கொண்டே உள்ள நேரத்தில் தற்போது மற்றொரு திருடும் முறை ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது!!
இதில் ஒரு நபர் பூட்டு போட்டு பூட்டியுள்ள வீட்டின் வெளியே நின்று கொண்டு அந்த பூட்டின் மீது மண்ணெண்ணையை ஊற்றி அதனை தீயினால் பற்ற வைக்கின்றார். சிறிது நேரம் அந்தப் பூட்டும் எரிகின்றது. அது எறிந்து முடித்து கொஞ்ச நேரம் ஆனதற்கு பிறகு அந்தப் பூட்டு திறந்து விடுகிறது. இது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியது. இதனை பார்க்கும் போது பணம் பொருட்களை வீட்டில் வைத்தாலும் திருடு போய்விடும் என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் வருகிறது. இதனால் வீட்டில் பணம் வைத்திருக்கும் மக்கள் அனைவரும் பயத்துடன் தங்கள் உழைத்த பணத்தினை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இப்படியே தொடர்ந்து திருடுகள் நடந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?? என்று தெரியாமல் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது!!