24 special

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து…. பெருமாள் சிலை காட்டிய அறிகுறி!

mk stalin, temple
mk stalin, temple

தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி போன்ற மாவட்டங்களில் பெய்த கனமழையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. சென்னையில் மழை நின்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்ட பொழுது மழைநீர் சென்னை பகுதி முழுவதும் தேங்கி மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் நிவாரண பொருட்களும் இன்றி மின்சாரமும் இன்றி குடிக்க தண்ணீரும் இன்றி மழை தண்ணீரை கொதிக்க வைத்து குடித்ததாக  மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து தென் தமிழகத்தில் பெய்த மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் முழுவதுமாக மூழ்கியது.


அப்பகுதியில் தமிழக அரசின் நிர்வாகிகள் இல்லாமல் மக்களை பரிதவிக்க விட்டது அரசின் மீது இருந்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளது என்று மக்கள் கோபமாக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர் அதுமட்டுமின்றி ஆய்விற்காக வந்த திமுக அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்களையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வி கேட்டது திமுக மீது மக்கள் கொண்ட அதிருப்தியை வெளிக்காட்டியது. இதற்கு முன்பாகவே 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை தெரிவித்து அவற்றில் பாதியை நிறைவேற்றாமல் அதிருப்திகளை திமுக பெற்றிருந்த நிலையில் தற்போது மழை பாதிப்பால் திமுக சந்தித்திருக்கும் அதிருப்தி என்பது அதைவிட அதிகமாக உள்ளது. மேலும் திமுகவின் முக்கிய அமைச்சர்களும் வழக்குகளின் சிக்கி சிறை சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும் அவர்கள் குற்றவாளிகள் என்றும் ஆட்சிப் பொறுப்பை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மேற்கொண்ட ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு அனைத்தும் நிரூபணம் ஆகி வருவது மக்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. 

அதுமட்டுமின்றி 5 மாநிலங்களில் தேர்தலில் INDI கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக திமுகவின்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை குறித்து பேசியது கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதாக தெரிவித்த பொழுதே INDI கூட்டணியில் முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற கருத்துக்களை முன் வைத்தனர். அதற்கேற்றார் போல் ஐந்து மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைவதற்கு உதயநிதியின் சனாதன பேச்சு தான் காரணம் என்று பரவலாக பேசப்படுவதால் INDI கூட்டணிக்குள்ளே பல சச்சரவுகள் ஏற்பட்டது. இதனால் திமுகவை கூட்டணியை விட்டு வெளியே அனுப்ப சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் பெருமாள் அறிகுறி ஒன்றை காட்டிக் கொடுத்தது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

அதாவது தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் அடுத்த அறியாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டும் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி கோவிலில் வைகுண்ட தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள் உற்சவர் சிலை சொர்க்கவாசல் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் பொழுது பல்லக்கில் இருந்த பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிலில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது ஆனால் நடந்து விட்டது! இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசு தள்ளாடும் வேலையில் இது போன்ற நிகழ்வு நடந்திருப்பது அபசகுனமாக இருக்குமோ என அறிவாலய வட்டாரம் அதிர்ச்சியில் பதைபதைப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.