இன்றைய சமூகத்தில் மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் தற்போது சமூக வலைதளங்களில் கூட அதிக அளவில் வெளியாகி வருகிறது. அதில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே மது பழக்கத்திற்கு ஆளாகி அதனை காமெடியாக வீடியோவாக பதிவிட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவ்வாறு மதுவினை அறிந்து விட்டு சண்டை போடுவது காமெடி செய்வது போன்ற பல வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அது போதாது என்று தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இது போன்று தவறான பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இளைஞர்களும் பெரியவர்களும் செய்யும் வீடியோக்களை பார்த்து நாமும் இதே போல செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் எழுகிறது. மேலும் அவர்களை சுற்றியுள்ள சமூகத்தில் உள்ளவர்களும் பள்ளிகளில் படிக்கும் நண்பர்களும் இது பற்றி பேச ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக அந்த பழக்கத்திற்கு ஆளாகின்றனர். தற்போது பள்ளி மாணவர்கள் மட்டும் அல்லாமல் மாணவிகள் கூட அடிமையாகாதே நம்மால் பல இணையங்களில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் அதற்குள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அவற்றை பெருமையாக நினைத்து ரிலீஸ் செய்து instagram போன்ற இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பொதுமக்கள் செல்லும் சாலைகளில் கூட பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நம்மால் செய்திகள் மூலம் பார்க்க முடிகிறது. ஒரு சிலர் சாலைகளில் செல்லும் பேருந்துகளுக்கு முன் நின்று யார் அதில் ஈடுபடுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துகளில் ஈடுபடுவது ஒன்று பல செயல்களை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசிடமே தகராறு செய்துள்ளார். அது குறித்து செய்திகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த விவகாரம் குறித்து விரிவாக காணலாம்!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பெண் காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். என்ன சமயத்தில் அப்பகுதியில் No entry வழியாக இளைஞர்கள் இருவர் வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் நிறுத்தி அப்பெண் காவலர் ஆவணங்களை கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் மது போதையில் இருந்ததாகவும், பெண் போலீசாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கொலை மிரட்டல் விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் செல்போனில் பெண் காவலரை படம் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்த பெண் போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் செல்வகுமார் வயது 19 என்பதும், மற்றொருவரின் பெயர் ஜாக்குவின் வயது 21 என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தவறான செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதிகமாகி உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இது தற்போது கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றவர்கள் கவலைப்படும் விதமாகவும் மாறி உள்ளது. இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி இப்படியே நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு எந்த நிலைமையில் இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பி வருகிறது.