பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என அனைத்திலும் தொடர்ந்து மூன்றவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமையும் எனகூறியிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதும் , முதல், 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தை நேற்று நடத்தியுள்ளார். மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்ததும், முக்கியமான, மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு செய்வதற்கான, 125 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது.ஒரு நாள் கூட வீணாக்காமல் இந்த செயல் திட்டம் அமல் செய்யப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறினார்
பாரளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆட்சி அமைந்ததும், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தார். அதுபோல, ஒவ்வொரு துறையின் சார்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஏழு கூட்டங்களில் பங்கேற்றார். அதில், முதல், 125 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டமும் அடங்கும். இதைத் தவிர, கோடை வெயில் மற்றும் பருவமழை தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
125 நாள் செயல்திட்டத்தில் உற்பத்தி துறைகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துவது மேலும் கோவில்கள் பாதுகாப்பு மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பது உள்ளிட்டவை அடங்கும். மேலும் ஓரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்ப்பர்க்காத ஒன்றை மோடி கூறியுள்ளார். பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி க்கு உள் கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு கொண்டுவந்தால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும். ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. குறிப்பாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது..ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி க்குள் பெட்ரோல் டீசல் விலை நடைமுறைக்கு வந்தால், பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.75-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65-ஆகவும் குறைய வாய்ப்புள்ளது.
ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நல்லதுதான். ஏனெனில் சரக்குப் போக்குவரத்தில் இது நேரடி நன்மையை வழங்கும். இதனால் அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும். அதனால் பணவீக்கம் குறையும். இப்படி நிறைய விஷயங்களில் நன்மைகள் இருக்கிறது. இதனை தொடர்ந்து தான் பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர ஆலோசனை நடத்தியுள்ளார் மோடி.மேலும் இந்த திட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களின் லிஸ்டையும் தயார்படுத்த சொல்லியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள். இந்த முறை எப்படியாவது பெட்ரோல் டீசல் விலையை கண்டிப்பாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் தற்போதே தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி! பிரதமர் மோடி 3வது முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் கண்டிப்பாக பெட்ரோல் டீசல் விலை ஜி.எஸ்.டிக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்!