
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவு, உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கைக் கொண்டது. பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தையில் இருந்து வந்த ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள 50% வரி, 15 முதல் 16 சதவீதமாகக் குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதிகள் உலக சந்தையில் இன்னும் போட்டித்தன்மையுடன் திகழும். "Make in India" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம், இதன் மூலம் மேலும் வலுப்பெறும். இந்திய உற்பத்தி உலக தரத்துக்கேற்ற முறையில் வளர்ந்து, ஏற்றுமதியின் புதிய யுகத்தை தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய மையப்புள்ளிகள் எரிசக்தி மற்றும் விவசாயம். உலகின் எரிசக்தி துறையில் நிலவும் நிலையற்றதன்மையில், இந்தியா தனது எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பல தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது.
அமெரிக்கா, எரிசக்தி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க முன்வந்துள்ளது. தற்போது இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 34% ரஷ்யாவிடமிருந்தும், சுமார் 10% அமெரிக்காவிடமிருந்தும் இறக்குமதி செய்கிறது. உலகளாவிய சந்தை மாற்றங்களை மதிப்பீடு செய்து இந்தியா தனது கொள்முதல் செய்து வருகிறது யார் விலையினை குறைத்து கொடுக்கிறார்களே அவர்களிடம் கச்சா எண்ணையை வாங்கி வருகிறது. இந்தியா.
அமெரிக்கா தற்போது ரஷ்யா அளிக்கும் தள்ளுபடிகளை வழங்க தயாராக இல்லாவிட்டாலும், ரஷ்ய தள்ளுபடிகளை குறைத்து வருகிறது. இதனால் உலக அளவில் அமெரிக்க எண்ணெய் தற்போது போட்டித்தன்மை வாய்ந்த விலைக்கு மாறி வருகிறது. விலைகள் உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும், மூலதன துறையில் தன்னிறைவு அடைவதற்கும் பெரிய படியாகும்.
அதே வேளையில் இந்தியா ரஷியாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை பலமாக்கி வருகிறது. அமெரிக்கா ரஷியாவில் இருந்து எரிசக்தி பொருட்கள் வாங்குவதை குறைக்க அழுத்தம் அளிப்பதற்கு மாறாக, இந்தியா தனது வர்த்தகத் துறைகளை எரிசக்திக்கு மட்டுமின்றி வேளாண்மை, மருந்துகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் போன்ற பல துறைகளுக்கு விரிவாக்கி வருகிறது இந்தியாவின் ரஷியாவுடன் உள்ள வர்த்தக உறவுகள், அதே சமயம் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்று வருகின்றன. ரஷியாவுடன் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பில் S-400 ‘சுதர்சன்’ ஏவுகணைகள் வாங்கும் முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கையை இந்தியா பேச்சுவார்த்தையில் உள்ளது.
இதற்கிடையில் இந்தியாவிடம் அமெரிக்கா சரணடைய மற்றொரு காரணமும் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிடம் மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயா தீவனத்திற்கான சந்தை அனுமதியை கோரியுள்ளது.
சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவாக அமெரிக்க சோள இறக்குமதி கடுமையாகக் குறைந்திருப்பது இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்தி வருகிறது. 2022-ஆம் ஆண்டு சீனா $5.2 பில்லியன் மதிப்பில் அமெரிக்க சோளத்தை இறக்குமதி செய்திருந்தது. ஆனால் 2024-இல் அது வெறும் $31 மில்லியனாகக் குறைந்தது. இதனால் அமெரிக்கா புதிய வாங்குபவர்களை தேடிக் கொண்டிருக்கிறது. அந்த சூழலில் இந்தியா உலக சந்தையில் முக்கிய மாற்று வாடிக்கையாளராக உருவெடுத்துள்ளது.
இன்றைய இந்தியா, பொருளாதார சக்தியிலும், உற்பத்தித் திறனிலும், உலக வர்த்தகத்தில் நிலைபெறும் முன்னணி நாடாக மாறி வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் அதற்கு மேலும் வலிமை சேர்க்கும். "
பிரதமர் மோடியின் தலைமையில் உருவாகி வரும் இந்த புதிய பொருளாதார பாதை, இந்தியாவின் பெருமை, நாட்டின் எதிர்காலம், மக்களின் நம்பிக்கை ஆகியவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
