சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர். இதில் சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால் வெடித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவருமே விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் கூட சனாதன ஒழிப்பை நியாயப்படுத்திதான் இருந்தது.
சானதனம் பற்றி உதயநிதி பேசியது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளப்பியது. தொடர்ந்து இந்திய கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மீ, மேற்கு வாங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் உதயநிதிக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் கூட்டணியில் கலசலப்பு நிலவியது. அந்த வகையில் பாஜகவும் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்து அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர்பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு எதிராக ஆர்பாட்டத்தையும் கையில் எடுத்தனர்.
தமிழ்நாட்டில் உதயநிதி வன்முறையை தூண்டும் விதமாக பேசியது காரணமாக, வாட மாநிலத்தில் இருந்து சாமியார் சானதனம் குறித்து தவறுதலாக பேசிய உதயநிதி தலையை வெட்டி கொண்டுவருபவருக்கு 10 கோடி அறிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த உதயநிதிக்கு எதிராக கோஸஹ் எழுப்பினர்.
இந்நிலையில் ஹிந்து முன்னணி அமைப்பின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், 'சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என ஒரு கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி பேசினார். அந்தக் கூட்டத்தில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார். எம்.எல்.ஏ., அல்லது அமைச்சர் என்பவர் மக்கள் பிரதிநிதி; அந்த பதவியை வகிப்பவர்கள், மக்களின் நம்பிக்கைக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்வது, அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. அதனால், அமைச்சர், எம்.எல்.ஏ., பதவிக்கான தகுதியை இழக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் நிகச்சியில் பங்கேற்றதால் அவருக்கு எதிராக, ஹிந்து முன்னணி பிரமுகர் கிஷோர் குமார்; திமுக - எம்.பி., ராஜாவுக்கு எதிராக, ஹிந்து முன்னணியின் மாநில துணை தலைவர் ஜெயகுமார் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். மூன்று மனுக்களும், நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்; அமைச்சர் உதயநிதி, ராஜா எம்.பி.,சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்; அமைச்சர் சேகர்பாபு சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகினர்....
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரின் பேச்சு குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வெறும் 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக பேசிய விவகாரம் பூதகரமாகி பதவி நீக்க சொல்லி தினமும் கண்டனம் வலுத்து வருகிறது.