24 special

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்லும் காலம் வந்துவிட்டது... டெல்லி குறிவைத்த டார்கெட் யார் தெரியுமா?!

RN ravi and edapadi
RN ravi and edapadi

நாடாளுமனற்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக-பாஜக விரிசல் கடந்த மாதம் தொடங்கியது. அதிமுக கூட்டத்தில் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். மீண்டும் பாஜகவில் அதிமுக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு பாஜக தலைமை எந்த வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது 2கோடி தொண்டர்களின் முடிவு என்று கூறினார். இதன் மூலம் டெல்லி பாஜக தலைமை அதிமுகவை கழட்டி விட முடிவு செய்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்தனர் மத்திய அமைச்சர்கள். அங்கு சென்ற அண்ணாமலை மூன்று நாட்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். 


பின், தமிழ்நாட்டிற்கு திரும்பிய அண்ணாமலை  "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையையை ஒத்திவைத்து, சென்னையில் அக்.,05 ம் தேதி பாஜக மாவட்ட செயலாளர் கூட்டம் அறிவித்திருந்தார். கூட்டம் தொடங்கியதில் இருந்து ஊடகங்களை அனுமதிக்காத நிலையில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை " இனி போட்டி என்பது திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான்" என்று அதிமுகவை கணக்கில் எடுத்துக்கொள்ளாத விதமாக பேசினார். மேலும், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று அதிமுகவை மறைமுகமாக விளாசினார். 

இதைத்தொடர்ந்து நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது, " யாருக்கு யார் போட்டி என்பது தேர்தல் வரும்போது தெரிய வரும், மக்கள் அதனை முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர்க்கட்சி என்று எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்தார். கூட்டணி முடிவுக்கு பிறகு யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று இரு கட்சியில் இருந்தும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது, இந்த பேச்சு மூலம் அதிமுகவுக்கும், பாஜகவுக்குமான அரசியல் மோதல் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் பாஜக டெல்லி தலைமை அதிமுகவிற்கு எதிராக காய் நகர்தலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூலமாக தொடங்கிவிட்டன. அதாவது கடந்த ஜூன் மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தார். அந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என்று ஆணை பிறப்பித்தார். 

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில், அதிமுக முன்னாள் அம்மைச்சார் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா ஆகியோர் குட்கா விநியோகாப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற வழக்கில், இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு ஆளுநரிடம் வலியுறுத்தினார். மேலும், மாநில அரசின் விஜிலென்ஸ் அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே சி வீரமணி, எம் ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி ஆளுநருக்கு அனுப்பியது ஆனால் ஆளுநர் மாளிகை இந்த கடிதங்களுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏன் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு ஆளுநர் எந்த வித அசைவும் கொடுக்கவில்லை, திமுக அமைச்சர் மட்டும் தான் ஊழல் வாதியாக தெரிகிறதா? அதிமுக அமைச்சர்கள் ஊழல் வாதியாக தெரியவில்லையா என ஆளுநர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார். அன்று அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்ததால் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கை ஆளுநர் கண்டும் காணாமல் இருந்தார். தற்போது அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி ஆளுநருக்கு டெல்லி தலைமையில் இருந்து உத்தரவு வந்து கொண்டு இருக்கிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விரைவில் இரு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்குக்கு ஆளுநர் கையில் எடுப்பார் என்று தகவல் வந்து கொண்டு இருக்கிறது. எனவே புதுக்கோட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேலூரை சேர்ந்த கே.சி. வீரமணி உள்ளிட்ட இரண்டு பேரும் உள்ள வழக்குகளில் சிக்கலாம் என்று அரசிய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கூட்டணியில் இருந்து இபிஎஸ் விலகியதற்கு இதற்கு மேல் தான் வருத்தப்படுவாராம்.