24 special

கடலுக்கடியில் ஆயுதமேந்திய ட்ரோனா...? அசத்தும் DRDO..!


புதுதில்லி : மத்தியில் பிஜேபி ஆட்சியமைந்த பின்னர் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வெகு வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. அதிலும் சமீபகாலமாக அதன் ஆராய்ச்சி முடிவுகள் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளன.


இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் DRDO வுக்கு தன்னிச்சையாக நீருக்கடியில் செல்லக்கூடிய AUVக்களை உருவாக்க அனுமதியளித்துள்ளது. இந்த AUVக்கள் (ட்ரோன்கள்) இந்திய பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.மேலும் உள்நாட்டு உற்பத்திகள் செயல்பாட்டிற்கு வரும்வரை வெளிநாட்டு AUVக்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான MDL எனப்படும் MAZAGOAN DOCKYARD LIMITED ஒரு EOI வெளியிட்டிருந்தது. அதில் ஆர்வமுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் கடலுக்கடியில்  அமைக்க பயன்படுத்தப்படும் 40 டன் எடைகொண்ட ஆளில்லா வாகனங்களை (XLUV) வடிவமைக்க மற்றும் மேம்படுத்தல் மற்றும் கட்டமைப்புக்கு ஒத்துழைக்க ஆர்வமிருக்கும் நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன.

மேலும் சமீபமாக லார்சன் டூப்ரோ நிறுவனம் DRDO வுடன் இணைந்து நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்படும் UAVக்களை புதிய மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்களுடன் உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது. சில கண்காணிப்பு தேவைக்காக ஏற்கனவே இந்தியா உருவாகியிருந்த ஆளில்லா விமானங்கள் கடலுக்கடியில் சோதனை முயற்சியாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை இதுவரை ஆளில்லா விமானங்களை நீருக்கடியில் கேட்கும் சப்தங்களை உணர்வதற்கும் சுற்றுப்புற சப்தங்களை பதிவு செய்வதற்கும் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இணைய கேபிள்களை கண்காணிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இனி DRDO வால் உருவாக்கப்படப்போகும் ட்ரோன்கள் ஆயுதங்களை ஏந்தி செல்வதோடு எதிரிகளின் நடமாட்டத்தையும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கும் என்பது இந்திய கடற்பிராந்திய பாதுகாப்பை உறுதிசெய்யும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.