24 special

அடப்பாவிகளா..! ஹேஷ்டேக் போட்டது நீங்களா..?


புதுதில்லி : கடந்த வாரம் நடந்த ஒரு தொலைகாட்சி விவாதத்தில் நுபுர் ஷர்மா நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக சில மாநிலங்களில் வன்முறை தூண்டப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. தொடர்புடைய நுபுர் ஷர்மாவை சர்ச்சை எழுந்த மறுதினமே கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தது பிஜேபி. இருந்தபோதிலும் சில அந்நிய சக்திகளால் வன்முறை தூண்டப்பட்டு வந்தது.


இந்நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்ப பாகிஸ்தான் தனது சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறது என்றும் ஹேஷ்டேக் போடும் ஒவ்வொரு ஐடியும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்றும் DFRAC (டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையம்) ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. தோராயமாக 60000தீர்க்கும் மேற்பட்ட பயனர்களை பகுப்பாய்வு செய்ததாக DFRAC கூறியுள்ளது.

அந்த பயனர்களில் 60,020 பேர் வெவ்வேறுநாடுகளில் இருந்து ஹேஸ்டேக் இட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து ஹேஷ்டேக் இட்டுள்ளனர். உலக மக்கள் மனதில் தவறான மற்றும் ஆதாரமற்ற  ஏமாற்றும் பொய்யான படங்களை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பகிர்ந்து வருவதாக கூறியுள்ளது DFRAC.

DFRACஅறிக்கையின்படி ஓமன் அரசின் க்ராண்ட் முப்தி இந்திய தயாரிப்புகளை முற்றிலும் புறக்கணிக்கப்போவதாக கூறியதாக பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் அரை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல பல ஊடகங்களும் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. அவர் அந்த கருத்தை விமர்சித்த போதும் (முப்தி),

அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றுபடவேண்டும் என கூறியிருந்தாலும் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கவேண்டும் என கூறவில்லை. அப்படி அவர் கூறினார் என்பது முற்றிலும் தவறான செய்தி. அதுபோல பிஜேபியில் இருந்து நீக்கப்பட்ட நவீன் ஜிண்டாலை தொழிலதிபர் ஜிண்டாலி சகோதரர் என பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் தவறான முற்றிலும் பொய்யான தகவலை அளித்துள்ளார். 

மேலும் இங்கிலாந்து வீரர் மெய்ன் அலி இந்தியாவுடன் கிரிக்கட் விளையாடாமல் புறக்கணிக்கப்போகிறேன் என கூறியதாக ஸ்க்ரீன் சாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதுவும் தவறான தகவலாகும்." என DFRAC தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.