24 special

மழை நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தலாமா கூடாதா?... வெளியான தகவல்!!

Mobile Phone
Mobile Phone

மழைக்காலம் வந்து விட்டாலே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும் சென்னையை எடுத்துக் கொண்டால் வீட்டிற்குள் எப்பொழுது தண்ணீர் வரும் எப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்படும் எப்பொழுது நாம் மழைநீர் தேக்கத்தில் மிதக்க போகிறோம் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதேபோன்று ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும் சிலர் மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெறும் அது மட்டும் இன்றி மழை நேரங்களில் பல மரங்கள் சாய்ந்து விழும் அந்த மரத்தின் கீழே நிற்கும் பலரும் உயிரிழக்க நேரிடும். இதை தவிர மழைக்காலங்களில் ஏற்படும் மின்னல் மற்றும் இடி போன்றவற்றால் பலர் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கும். 


இதன் காரணமாக மழையில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் அறிவுரை கூறியிருப்பார்கள். குறிப்பாக மழை பெய்வது போன்ற ஒரு அறிகுறி இருந்தாலே வீட்டில் உள்ள தொலைக்காட்சி குளிர்சாதன பெட்டி மற்றும் சலவை இயந்திரம் என அனைத்து இயந்திரத்தையும் அணைத்து விடுவார்கள். ஏனென்றால் மின்னல் ஏற்படும் பொழுது அதன் மூலம் ஏற்படும் அதிர்வுகளால் மின்சாரமும் பாதிக்கப்பட்டு மின்சாரத்தால் இயங்குகின்ற இயந்திரங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கையை செய்வார்கள். 

அதுமட்டுமின்றி இடி மற்றும் மின்னல் ஏற்படும் பொழுது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் மொபைல் போனை பயன்படுத்தினால் இடியால் ஏற்படும் அதிர்வலைகள் மொபைல் போனை தாக்கி அதனை பயன்படுத்தும் நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் மழை பொழிகிறது என்றாலே மொபைல் போன் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்யும்படி வலியுறுத்துவார்கள். ஆனால் உண்மையிலேயே இடி மின்னல் ஏற்படும்பொழுது மொபைல் போன் பயன்படுத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா இடி மின்னலின் அதிர்வலைகள் மொபைல் ஃபோனையும் தாக்குமா என்பது குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகாமலை உள்ளது. அது குறித்து விரிவான தகவலை காணலாம், 

சமீபத்தில்  ஏற்பட்ட மழையை தவிர்ப்பதற்காக நான்கு பேர் மரத்திற்கு பின்னால் நின்றுள்ளனர் அப்பொழுது மின்னல் தாக்கி அவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு ஒரு ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் மொபைல் போன் மீது குற்றம் சாடி பதிவிட்டிருந்தார். இதற்கு ஒரு சிலர் விபத்திற்கு மொபைல் போன் ஒரு காரணம் தான் என்றும் ஒரு சிலர் இந்த விபத்திற்கு மொபைல் போனுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் பதிவிட்டதை அடுத்து அந்த ஐபிஎஸ் அதிகாரி இந்த பதிவை நீக்கிவிட்டார் இருப்பினும் இந்த விவாதம் பெருமளவில் பேசப்பட்டது. 

அதாவது தற்போது விற்கப்படுகின்ற மொபைல் ஃபோன்களில் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் மின்காந்த குறியீடுகள் உள்ளது. அதனால் மொபைல் போனின் கூறுகள் மின்னலை ஈர்க்காது என்றும்,  தொலைபேசிகள் ரேடியோ அலைகள் மூலம் செயல்படுவதால் மின்னலின் போது செல்போனை பயன்படுத்தலாம் என்றும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மின்னல் மற்றும் இடி ஏற்படும் சமயங்களில் செல்போன் சார்ஜுடன் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி திறந்தவெளியில் அருகில் எந்த பொருளும் இல்லாத பொழுது மின்னல் ஏற்படும் சமயத்தில் நாம் சுற்றித் திறந்தால் மின்னல் நம்மளை தாக்கும் அபாயம் இருக்கிறது என்றும் நல்ல திடமான கூரைகளுக்கு கீழ நாம் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. ஆனால், மழையின் பொழுது மொபைல் போன் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஒரு ஆய்வும் தெளிவாக குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.