24 special

யாருப்பா நிவேதா பெத்துராஜை ஏமாற்றியது.. பரபரக்கும் இணையம்...

Nivetha
Nivetha

தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஹீரோயின் ஆக நடித்து வருபவர் தான் நிவேதா பெத்துராஜ்!! இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதன் பிறகு தெலுங்கு மொழியில் மெண்டல் மடிலோ என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்து அந்த மொழியிலும் அறிமுகமானார். எனவே தெலுங்கு திரையுலகத்திலும் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதன் பிறகு தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து திமிரு புடிச்சவன், அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்க தமிழன் என்னும் திரைப்படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். மேலும் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு மிக குறுகிய காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு அதிக அளவில் ரசிகர்களை பெற்று பல முன்னணி ஹீரோயின்களுக்கு மத்தியில் இவரும் ஒரு பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நிவேதா பெத்துராஜ் தமிழகத்தின் மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகை என்பது மிகவும் சிறப்பானது. 

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் தனது காரில் அமர்ந்து கொண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் போலீசார் காரின் டிக்கி கதவை திறக்க சொன்னபோது அதனை பிறக்க மறுத்த நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல அமைந்து இருந்தது. அது மட்டுமல்லாமல் வீடியோ எடுக்கும் நபரின் கேமராவையும் கட்டி விடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு படும் வைரல் ஆகி வந்த நிலையில் இந்த வீடியோவானது பருகு என்ற வெப் சீரியஸின் நிவேதா பெத்துராஜ் நடிப்பதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங் வீடியோ தான் இது என்ற தகவலும் வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது இந்த சர்ச்சையில் நிவேதா பெத்துராஜ் ஏமாற்றப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. அது குறித்து விரிவாக காணலாம். 

கண்ணு சில மாதங்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ்க்கு தமிழ்நாட்டின் ஆளுநர் கட்சி தலைவராக இருக்கும் ஒருவர் துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பெத்துராஜ் தான் என்ன எதிர்மறையாக நினைத்தாலும் அது நிச்சயமாக நடந்து விடுகிறது என்றும், அவருடைய பாய் பிரண்டு அவரை ஏமாற்றி விடுவார் என்றும், யாருக்காக தன்னை விட்டு செல்வான் என்று நினைத்திருந்தாரோ அதேபோல இன்னொருவருக்காக தன்னை ஏமாற்றிவிட்டு அவருடன் சென்று விட்டார் என்பதையும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன் நினைப்பதை எல்லாம் அப்படியே நடக்கிறது என்றும், தான் இப்போது வைத்திருக்கும் காரையும், எதிர்காலத்தில் வாங்க போகும் காரினையும் கற்பனை செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு தனது பாய் ஃப்ரெண்ட் தன்னை ஏமாற்றியதாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இவரின் பாய் பிரண்டு யார் என்று தற்பொழுது அனைவரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் அரசியல் வாரிசு தலைவரின் பெயரை கமெண்டுகளில் பதிவிடுகின்றனர்.