24 special

நாளை பிரதமர் வருகை முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக..!

Modi,  annamalai
Modi, annamalai

பாஜக தமிழகத்தில் தனி ரூட்டில் செல்ல ஆயத்தமாகி இருப்பது அக்கட்சியின் தலைவர்கள் பேச்சின் மூலம் பிரதமரின் வருகையின் போதும் உறுதியாகி இருக்கிறது. பிரதமர் மோடி நாளை  தமிழகம் வர இருக்கிறார், நாளை மதியம் சரியாக 1.50க்கு மதுரை விமான நிலையம் வருகிறார். 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமுக்கு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் முழு வீச்சில் களம் இறங்கி இருக்கிறார்கள்.


இந்த சூழலில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருவரும் பேசிய வார்த்தைகள் கூட்டணி எதை நோக்கி செல்கிறது என்பதை உறுதி செய்கிறது, அண்ணாமலை மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் எப்படி பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் என நினைக்கிறீர்கள் என கேட்கிறீர்கள் என்னை கேட்டால் 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று தான் சொல்லுவேன்.

நீங்கள் இன்னும் அதனை நம்பும் சூழலுக்கு வராத காரணத்தால் குறைத்து சொல்வதாக அண்ணாமலை பேசி இருந்தார், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்போ எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும் என கூறி இருக்கின்றன. இந்த சூழலில் தான் பிரதமர் வருகை அரசியல் நாகர்வுகள் என்ன என்பதை உறுதி படுத்தும் என்கிறார்கள்.

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரண்டு தரப்பும் நேரம் கேட்டு இருக்கிறார்கள் ஆனால் யாருக்கும் பிரதமர் அலுவலகம் தரப்பில் நேரம் கொடுக்கப்படவில்லை, அதே நேரத்தில் பிரதமர் யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார் என்றால் நிச்சயம் பாஜக தனி ரூட்டில் செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பலமுறை பல்வேறு சர்வே மற்றும் மக்கள் கருத்து ஆகியவற்றை கணக்கிட்டு பாஜக தலைமையோ பல அறிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்து விட்டதாம் அதிமுக பிளவு பட்டு இருந்தால் அது நிச்சயமாக திமுகவிற்கு சாதகமான சூழலை உண்டாக்கி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் பாஜக எதிர்க்கட்சி இடத்தை பிடிக்கும் எங்களது நோக்கம் அதுவல்ல நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற கூடாது என தெளிவாக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சொல்லிய பிறகும் அது குறித்து எந்தவித பதிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கவில்லையாம். இந்த நிலையில் தான் தனியாக தேர்தலை சந்திக்க தயாராக கூறி பாஜக தலைமை தெரிவிக்க அதற்கான பேச்சின் முன்னோட்டம் தான் இரு நாட்களுக்கு முன்னர் மதுரையில் அண்ணாமலை பேசிய 39 தொகுதிகளும் பாஜக வெல்லும் என கூறிய கருத்துக்களாக பார்க்க படுகிறது.

இரட்டை இலையை வைத்துதான் அதிமுக பலம் நாளை அது யார் கையில் இருக்கிறதோ அவர்கள் பின்னால் அதிமுகவினர் திரள வாய்ப்பு இருக்கும் நிலையில் அவசரப்பட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜக கூட்டணியை கெடுத்து விட்டதோ என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது.

நாளைய பிரதமரின் வருகை இவை அனைத்திற்கும் முற்று புள்ளியாக அமையும் என்று கூறப்படுகிறது.