24 special

கோவைக்கு அண்ணாமலையின் 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதி..!!

Annamalai
Annamalai

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை லோக்சபா தொகுதிக்கு 100 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை. இந்த வாக்குறுதிகள் பல முக்கிய அறிவிப்புகள் உள்ளது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. 



நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னுமும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் உற்று நோக்கும் பகுதியாக கோயம்பத்தூர் தொகுதி மாறியுள்ளது. பாஜக சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 


இந்நிலையில், கோவை லோக்சபா தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகளை அளித்துள்ள அண்ணாமலை, இந்த 100 வாக்குறுதிகளும் தான் லோக்சபா எம்.பி ஆன அடுத்த 500 நாட்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். 


1) கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறைதீர்ப்பு மையமாக செயல்படும்.

2) கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும்.

3) கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

4) தமிழகத்தில் இரண்டாவது ஐஐஎம் (Indian Institute of Management - IIM) கோவையில் நிறுவப்படும்.

5) விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை-நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.

6) கோவையின் ஜீவநதியாக இருக்கும் நொய்யல் நதி மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகளை 

     மீட்டெடுத்து கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.

7) விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வண்ணம் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு 

    கொண்டுவரப்படும்.

8) கோவையில் NIA மற்றும் NCB கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.

9) கோவையில் Automotive Corridor அமைக்கப்படும். கோவை Defence Corridor-ல் செமிகண்டக்டர்களை தயாரிக்க 

     பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.

10) கோவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 4 நவோதயா பள்ளிகளை அமைத்து, நமது குழந்தைகளுக்கு 

      உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

11) இந்த பகுதியின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி 

     செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு 

     ஆணையம், பாட்டியாலாவின் (SAI Patiala) கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும்.

12) கோவை நாடாளுமன்றத்தில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

      வயோதிகர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவையை பூர்த்தி 

      செய்ய கோவையில் உலக தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை 

       எடுக்கப்படும்.

13) கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை 

      நிறுவப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையில் இலவச சிகிச்சை 

      வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14) காமராஜர் நினைவாக, கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.

15) கடந்த 10 ஆண்டுகளில், கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசு வழங்கிய அனைத்து 

     நலத்திட்டங்கள் மற்றும் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஆகியவை சிறப்பு 

     தணிக்கைக்கு உட்படுத்தப்படும். முறைகேடுகளின் மீதும், அதற்கு காரணமானவர்களின் மீதும் 

     கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

16) கோயம்புத்தூரில் புறநகர் ரயில் சேவை கொண்டுவரப்படும்.

17) செட்டிப்பாளையம் முதல் கரூர் வரை பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் வழியாக புதிய ரயில் 

       வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

18) கோவை மக்களின் வசதிக்காக கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று புதிய 

       ரயில் முனையங்களும் உருவாக்கப்படும்.

19) கோவை எக்ஸ்பிரஸ் போன்று கோவை- பொள்ளாச்சி, பழனி, மதுரை, திருநெல்வேலி தினசரி ரயில் இயக்க 

       நடவடிக்கை எடுக்கப்படும்.

20) திருச்சி பொன்மலையில் உள்ளது போன்று கோவை போத்தனூர் அல்லது வடகோவையில் ரயில்வே 

      பணிமனை அமைத்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

21) கோவை - கன்னியாகுமரி, கோவையிலிருந்து கொச்சி வழியே திருவனந்தபுரம் வரை புதிய வந்தே பாரத் 

       ரயில்கள் இயக்கப்படும்.

22) கோவை- திருச்சி சாலை புதிய 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும். கோவை- கரூர் இடையே 8 

      வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை.

23) பல்லடம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை 81, ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை.

24) புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.

25) கோவையை Hydrogen Fuel Cell உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை.

26) குறு தொழில்களுக்கு தனி தொழிற்பேட்டை உருவாக்க cluster திட்டம் மூலம் உதவிகள்.

27) நெசவாளர்களுக்கு தனி வங்கி, சிறப்பு ஓய்வூதியம்.

28) வள்ளி, கும்மிக்கு பாரம்பரிய கலையாக உரிய அங்கீகாரம்.

29) கோவையில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம்.

30) சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் அமைக்கப்படும்.

31) கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம். உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அண்ணாமலை கொடுத்துள்ளார். 


இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தான் வெற்றி பெற்று 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை கவர்ந்து உள்ளது. கோவை தொகுதியில் வெற்றி என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சாதகமாக உள்ளதாக சில தகவல் வந்துள்ளது. மேலும், மக்கள் தாமரைக்கு தான் தங்களது ஓட்டுகள் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.