தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று லோக்சபா தேர்தல் மற்றொன்று போதை பொருள் கடத்தல்.... இந்த இரண்டுமே அரசியல் கட்சிகள் சார்ந்ததாக பார்க்கப்படுகிறது அதிலும் குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திலும் போதை பொருள் கடத்தலிலும் பெரும் பின்னடைவை பெற்றிருப்பது திமுக! இதனால் தேர்தலின் முடிவுகள் திமுகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்ற வகையிலான பேச்சுக்கள் தேர்தல் களத்தில் உலா வருகிற நிலையில் தற்போது மற்றுமொரு திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஈசிஆர் வினோத்குமார் ஜோசப் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசா மூலம் மலேசியா வழியாக துபாய் செல்ல முற்பட்டிருந்தார், அதனால் மலேசியா சென்று இறங்கிய வினோத்குமார் ஜோசப்பிடம் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் சட்டவிரோத பண பரிவர்த்தனைக்காக மலேசியா வந்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர்.
அதனால் வினோத்குமார் ஜோசப்பை மலேசிய குடியுரிமை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பியதோடு வருமானவரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வினோத்குமார் ஜோசப்பை வருமானவரித்துறை அதிகாரிகள் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வினோத்குமார் பயன்படுத்தி வந்த செல்போன் லேப்டாப் ஐ பேட் போன்றவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது வினோத்குமார் ஜோசப் அரசியல் கட்சியினருடன் தொடர்பில் இருக்கின்ற அப்பு என்பவர் உடன் தொடர்பில் இருந்து உள்ளார் என்பதையும் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சி ஒன்றிற்கு தேர்தல் செலவிற்காக ஹவாலா நெட்வொர்க் கும்பலுடன் தொடர்புடைய அப்புவின் மூலம் ஹவாலா பணத்தை மலேசியா மற்றும் துபாயில் இருந்து கொண்டு வருவதற்காகவே இவர் துபாய் செல்ல முற்பட்டுள்ளனர் என்பதும் வருமானவரித்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி வினோத்குமார் ஜோசப்பின் செல்போனில் கால் ஹிஸ்டரி மற்றும் whatsapp ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது மலேசியாவை சேர்ந்த வைர வியாபாரி உடனும் துபாயை சேர்ந்த ஒரு செல்வந்தருடனும் வினோத்குமார் ஜோசப் பேசி உள்ளார் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்து அமலாக்க துறையிடம் அவரை ஒப்படைத்தனர். இதனை அடுத்து அமலாக்க துறையும் இவர் மீது விசாரணை மேற்கொண்டனர், ஆனால் ஏற்கனவே அப்பு மற்றும் வினோத்குமார் ஜோசப் ஆகிய இருவருமே அமலாக்க துறையின் விசாரணை வடிவத்திற்குள் இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஹவாலா பணம் 200 கோடி ரூபாயை தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியின் தேர்தல் செலவிற்காக கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதையும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது குறிப்பாக வினோத்குமார் ஜோசப் மற்றும் அப்பு இருவரும் எந்த கட்சிக்காக இந்த பணியை செய்துள்ளனர் என்பது குறித்த விசாரணையையும் அமலாக்க துறையினர் மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் போதை கடத்தல் விவகாரத்தில் அதிக விமர்சனங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்திருக்கும் அறிவாலத்திற்கு இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்து அரசியல் விமர்சகர்களிடையே கேட்ட பொழுதும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சிக்காக வினோத் குமார் மற்றும் அப்பு இவ்வளவு பெரிய வேலையை செய்துள்ளார்கள் என்றால் நிச்சயமாக ஆளும் தரப்பின் அதிகாரத்திலேயே செய்திருப்பார்கள்.... சமூக வலைதளங்கள் மூலம் அதிக தொகையை செலவழித்து திமுக தான் தற்போது பெருமளவிலான விளம்பரங்களை செய்து வருகிறது, அதனால் எங்களது சந்தேகமும் அவர்கள் மீது தான் உள்ளது என்ற வகையிலான கருத்துக்களை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.