24 special

100 யூனிட் மின்சாரம் ரத்து... மக்கள் தலையில் இடியைப்போடும் செந்தில் பாலாஜி... ஷாக்கை கையில் கொடுத்த திராவிட மாடல் அரசு!

Senthil balaji
Senthil balaji

மின் கட்டண உயர்வை மக்கள் மனதில் இருந்து மறக்க செய்வதற்காகத்தான் ஜெயலலிதா மரணத்தில் ஆறுமுகசாமிஆணையத்தை தாக்கல் செய்து அந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக அரசு என்கிறார்கள்.


மின் கட்டண உயர்வையே சமாளிக்க முடியாமல் தவித்து வரும் தமிழக மக்களுக்கு ஆதார் இணைப்புகளை வெளியிட்டு 100 இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிர்வேட்டு வைத்திருக்கிறது.

அடுத்த 2 மாதங்களுக்கு மின்கட்டண உயர்வால் பல அதிருப்தி குரல்கள் எழும் என்பதை சமாளிக்கவே ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி தூப்பாக்கி சூடு அறிக்கைகளை தாக்கல் செய்து சமாளிக்கப்பார்க்கிறது திராவிட மாடல் அரசு என உள்விவரமறிந்தவர்கள் விளக்குகின்றனர்.. 

மின் நுகர்வோர்கள் சிலர் நம்மிடம், ‘’2016 சட்டமன்ற தேர்தல் வெற்றி அடுத்து தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவச திட்டத்தை அமல்படுத்தினார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 127 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 91 லட்சம் வீடுகள் பயனடைந்து வருகின்றன.

இந்நிலையில் தான் கடந்த செப்டம்பரில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது.இந்த ஷாக்கில் இருந்து தமிழக மக்கள் மீளாத நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் பெறும் அனைத்து நுகர்வோரும் தங்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன்படி மின்சாரத்தை பொருத்தவரை இலவசமே இல்லை என்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரம் அப்படி ரத்தாகிவிடும் என்று கூறுகின்றனர். 

இதுகுறித்து  தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’தற்போது தமிழகத்தில் 3.5 கோடி மின் நுகர்வோர்கள்  இருக்கிறார்கள். இவர்களில் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவதற்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம், விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளருக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், மேற்கண்ட திட்டங்களுக்காக மின்வாரியத்திற்கு மாநில அரசு உரிய  மானிய தொகையை முறையாக விளங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மின்வரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது வீடுகளின் மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது வீடுகளில் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பின் மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் உபயோகிக்கும் பயனளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும். 

அதாவது,   ஆறு வீடுகளில் வாடகைதாரர்கள் இருந்தால் ஆறு இணைப்புகள் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும். அந்த ஆறு பேருக்கும் இது நாள் வரை தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைத்து வந்தது. தற்போது தமிழக அரசு புதிய அரசாணை அறிவிப்பின் காரணமாக அந்த வீட்டில் ஆறு பேரில் ஒருவருக்கு மட்டுமே 100 எண்ணின் இலவசமாக மின்சாரம் கிடைக்கும். அதாவது வீட்டு உரிமையாளரின் பெயரில் தான் மின் அட்டை இருக்கும். இதனால் 100 யூனிட் மின்சாரம் என்பது மீட்டு உரிமையாளருக்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள ஐந்து வாடகைதாரர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் ரத்தாகிவிடும்.

அதுமட்டுமின்றி வீட்டில் தண்ணீர் மோட்டார் இயக்க தனி சர்வீஸ் வைத்திருப்பவர்களுக்கு 500 ரூபாய்க்கு மேல் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தினாலும் 6 ஆயிரம் ரூபாய்  வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது தண்ணீர் மோட்டார்களுக்கு பிக்சட் ரேட்டாக இன்னொரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் கட்டணமும் யூனிட்டுக்கு எட்டு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்று அதிர வைக்கிறார்கள். 

இதுகுறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ’’கடந்த 10 ஆண்டுகள் கால அதிமுக ஆட்சியில் மின்வாரியத்தை மொத்தமாக அடகு வைத்து விட்டனர்.அதனால் தற்போது மின்வாரியத் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. அதற்கு ஆண்டுக்கு 16 ஆயிரத்து 511 ரூபாய் கோடி வரை வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மானியமாக கடந்த 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி மின் வாரியத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டார்.

நடப்பு ஆண்டும் 3000 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தற்போது மத்திய அரசின் உத்தரவின் பேரிவில் தான் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வீட்டு வாடகைதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது. உண்மையில் இதன் மூலம் வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு உரிமையாளர்கள் அதிக மின்கட்டணம் வாங்குவது தடுக்கப்படும் ’’ எனச் சமாளிக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் ஓட்டுப்போட்ட மக்கள் தலையில் நன்றாக மாவரைக்க முடிவெடுத்து விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதை திசைசாய்க்க ஜெயலலிதா மரண அறிக்கை தாக்கல், மத்திய அரசு நிர்பந்தம் என முட்டுக்கொடுக்கவும் அவர் தயாராகி விட்டார்’’ என காண்டாகிறார்கள் எதிர்க்கட்சியினர்.