பல வருடங்களாக அரசியல் களத்தில் இருப்பவர் நாம் தமிழர் சீமான். ஆரம்பத்தில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரிய மேடைகளில் கடவுள் மறுப்பு, நாத்திகக் கருத்தியல்களை மிக வீரியமாகப் பேசிய அண்ணன், அடுத்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் ஆகியோரை முன்னிலைப்படுத்திப் பேசிவந்த சீமான், கொஞ்சம் `முருகன், சேயோன்., `மாயோன்...’ என்றெல்லாம் முழங்க தொடங்கி இப்போது எங்கேவெல்லாம் குறுக்குச் சந்து கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் ஐக்கியமாகி விட்டு நிதானம் காட்டத்தொடங்கி இருக்கிறார் சீமான்.
’தன் கட்சி காரர்களிடம் தான் ஒரு தமிழன் என்று நம்ப வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் "கிருஸ்தவர் சீமான்" என அவர் பற்றி விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ’’சீமான் என்னும் மத அடிப்படைவாதியுடன் நின்று அரசியல் செய்ததற்காக வெட்கப்படுகிறேன்!
அரசியல் உரிமை என்பது நிர்வாக எல்லைக்குள் வாழும் மக்களுக்கான அடிப்படை உரிமை! மத உரிமை என்பது விருப்ப தேர்வு!’’ எனக் கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி சென்ற ராஜீவ்காந்தி, நாம்தமிழர் கட்சியில் வெளியேற காரணம் சொல்லி விலகினார். ( இப்போது திமுகவில் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருக்கிறார்.) இந்நிலையில் சீமானுடன் களத்தில் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் இயக்குநர் மு.களஞ்சியம் சீமான் பற்றிய பேச்சு படு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநர் மு.களஞிசியத்திடம் பேட்டி எடுத்த நெறியாளர் சீமான் கிருஸ்தவரா? எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த இயக்குநர் களஞ்சியம். ஆமாம், சீமான் கிருஸ்தவர் தான். எப்போதுமே அவர் கிருஸ்தவர் தான். அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் கிருஸ்தவர்கள் தான். சீமானின் தம்பி பெயர் ஜேம்ஸ் பீட்டர்.அவரது அப்பா பெயர் அன்னம்மாள், ஜெபஸ்தி’’ என ஓபனாக பேசி இருக்கிறார். இது சீமானுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதற்கான வாக்காளர் அடையாள அட்டைகளையும் வரிசைகளாக அடுக்கி ஆதாரங்களையும் முன்னெடுத்து வைத்து சமூகவலைதலங்களில் பரப்பி வருகிறார்கள் அவரது தானைத் தம்பிமார்கள்!