24 special

சென்னையில் பரபரப்பு 20 பெண்ஆசிரியர்கள் மயக்கம்

dpi
dpi

சென்னை நுங்கம்பாக்கத்தில் 20-பெண்ஆசிரியர்கள் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. சென்னை : சென்னை நுங்கம்பாக்கம்  டி.பி.ஐ., வளாகத்தில் சில நாட்களாக  ஆசிரியர்களின் போராட்டம் நடத்திவருகின்றனர். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை  மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள்  நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு விடுத்தனர்.நேற்று  உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து  தரப்பு ஆசிரியர்களும்  காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டனர்.பெண்கள் முதல் வயது மூத்தோர் (பெரியவர்கள் )வரை கடும் வெயிலான பாராமல் தரையில் அமர்ந்து முழக்கம் எழுப்பினர். 


  மேலும்  போராட்டத்தில் பெண்கள் 20 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர்.அவர்களை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மற்ற ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அரசுக்கு எதிராக அனைத்து  தரப்பு ஆசிரியர்களும்  தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆசிரியர்கள் நேற்று இரவு மழையிலும் போராட்டத்தை  தொடர்ந்துள்ளனர். மயக்கமடைந்த  ஆசிரியர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போராட்டம்  தீவிரமடையும்  என்பதால் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ.,வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் மயங்கி விழுந்தாலும் துரிதமாக நடவடிக்கை எடுக்க 108 ஆம்புலன்ஸ் வாகனம்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும்  அறிவித்துள்ளது .