24 special

சத்தம் இல்லாமல் திருமாவளவன் மீது சந்தேகப்பட்டு திமுக செய்த காரியம்...!

thirumavalavan, mk stalin
thirumavalavan, mk stalin

அதிமுக பாஜக உடைந்ததற்கு பிறகு எப்படியும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவில் சேர்ந்து விடும் என்று பல அரசியல் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை விட விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிப்பாக செல்லும் என பெரிய அளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் பனிப்போர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் தனது கட்சி செயல்பாடுகளை கூட சுதந்திரமாக செய்ய முடியாத நிலையிலும் மக்களுக்காக குரல் கொடுக்கப்படும் பொழுது ஆளுங்கட்சியின் அனுமதியை பெற வேண்டிய நிலையிலும் எந்த ஒரு கேள்வியும் கேட்க முடியாத இடத்தில் இருப்பதாக மௌனம் சாதித்து வரும் நிலையிலும் இருந்து வருகிறார் என வெளிப்படையாகவே அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அன்றைய தினமே திருமாவளவன் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வேறு சந்தேகமாக பார்க்கப்பட்டது.


அதுமட்டுமல்லாமல் அரசியல் விமர்சகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் திருமாவளவனின் உடல் நலம் குறித்து கேட்டுள்ள தகவலும் வெளியானது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்திப்பதற்காக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு குறித்து துரை வைகோ கூறும்போது, 'விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு..தாழ்த்தப்பட்ட,  பட்டியலின மக்களின்  பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து  மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன். அயராத அரசியல் பயணத்திற்கு இடையே தங்களின் உடல் நலத்தையும் பேண வேண்டும்.விரைவில் பூரண நலமடைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்றும், அவ்வப்போது சீரான ஓய்வும், உறக்கமும் தேவை என்று அண்ணனிடம் கூறிவிட்டு விடைபெற்றேன் என துரை வைகோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து வெளியில் விசாரித்தபொழுது திமுகவின் சமாதான தூதுவராக, உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் தருவதற்கு தாங்கள் இருக்கிறோம் கூட்டணி பற்றி யோசிக்க வேண்டாம் என்று கூறுவதற்காக தான் துரை வைகோ அவரை சந்தித்துள்ளார் எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

அதாவது ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கின்ற போதிலும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிர்வாகிகள் பெருவாரியான வரவேற்புகளும், ஆதரவும் ஆளும் கட்சி தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் தெரிந்த ஒரு கதை என்றாலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வேங்கை வயல் சம்பவத்திற்காக கருத்து தெரிவித்த திருமாவளவனிடம் நீங்களும் திமுக காரன் தானே என்று கேட்க உடனடியாக கோபித்து மிகவும் ஆவேசத்துடன் நான் திமுக காரன் என்று பார்த்தாயா என பதில் அளித்த திருமாவளவனுக்கு தற்போது பாஜகவில் இருந்து அதிமுக விலகியது இன்பச் செய்தியாக அமைந்துள்ளது என்றும் இதனால் எடப்பாடியிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் திமுக தலைமைக்கு சென்றுள்ள காரணத்தினால் ஒரு சீட் அல்ல எத்தனை சீட்டுகள் நீங்கள் கேட்டாலும் நாங்கள் தருகிறோம் என்ற தகவலை தெரிவிக்கும் தூதுவராக துரை வைகோ தற்போது மருத்துவமனைக்கு சென்று திருமாவளவனை சந்தித்து வந்துள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர்..