24 special

சத்தமில்லாமல் புதுச்சேரியில் வரலாற்று சம்பவத்தை செய்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்...! குவியம் பாராட்டுக்கள்...!

tamilisai soundarajan
tamilisai soundarajan

புதுவையில் 10% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேருவதற்கான நடவடிக்கை சாத்தியப்படுத்தி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றி உள்ளார் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால் தற்பொழுது அங்கு துணைநிலை ஆளுநராக இருந்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் புதுவையை முன்னேற்றுவதற்கான பல ஏற்பாடுகளை செய்து வருகிறார், குறிப்பாக அவர் தெலுங்கானா, புதுவை என இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பை வகித்தாலும் புதுவையை பொருத்தமட்டில் அவர் செய்த விஷயங்கள் பல்வேறு வகையில் புதுவை மக்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கக் கூடியதாக இருப்பதாக புதுவை கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த நிலையில் புதுவையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அதனை மசோதாவாக்கி சட்டமாக்குவதற்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நிறைய முயற்சி செய்துள்ளார். அதிலும் குறிப்பாக இதனை டெல்லியில் பேசி நடைமுறைப்படுத்துவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம், குறிப்பாக ஜி20 மாநாடு நடந்து வரும் சமயத்தில் அதிகாரிகள் ஜி 20 மாநாட்டில் கவனத்தில் இருந்து வந்துள்ளனர். ஆனாலும் அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு யார் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார் தமிழிசை. இது மட்டுமல்லாமல் இதனை இவர் செய்ததற்கு காரணத்தை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவிலேயே கூறி இருக்கிறார். அதாவது இந்த ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும், அப்படி சேர வேண்டும் என்றால் அந்த மசோதா இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில் இந்த மசோதா நிறைவேற தள்ளி போகுமாயின் இந்த ஆண்டு படித்த மாணவர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும், அதற்காகவே நான் முழு முயற்சி எடுத்துக் கொண்டேன் எனவும் கூறியுள்ளார். 

மேலும் அவர் இது தொடர்பாக பேசும் பொழுது புதுவை அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதுவையில் அரசு பள்ளியில் படித்த 19 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது, இந்த 19 மாணவர்களில் ஒரு பத்து பேருக்கு வெளியில் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் பொழுது அதில் ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் அவர்களிடம் நன்கொடை கேட்டதால் அந்த மருத்துவ கல்லூரிகளுக்கு புதுவை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைத்து பேசியிருக்கின்றனர். அந்த தனியார் கல்லூரிகளிடம் 'இந்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவர்கள் இவர்களிடம் நீங்கள் சிறப்பு கட்டணம் வாங்க கூடாது' என ஆளுநர் தமிழிசை கூறிய காரணத்தினால் இவர்கள் நன்கொடை போன்ற எந்த ஒரு கட்டணமும் கொடுக்காமல் புதுவையில் தற்பொழுது மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அந்த மாணவர்கள் படிக்கக்கூடிய புத்தகங்கள் அவர்களுக்கு உபகரணங்கள் அனைத்தையும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரது சொந்த செலவிலேயே வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால் அந்த மாணவிகள் நெகிழ்ச்சியுடன் புதுச்சேரி துணைநிலை முதல்வர் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களால் இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டதால் பிரதமர் மோடிக்கும், தமிழிசைக்கும் நன்றி கூறினார்கள். 'பதவியில் இருப்பதால் தான் என்னால் ஏழைகளுக்கு சேவை செய்ய முடிகிறது' என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உருக்கமாக ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். வீடியோ இப்படி புதுவையில் அதுவும் அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றும் அளவிற்கு ஒரு மசோதாவை சட்டம் ஆக்கி அதனை நடைமுறைப்படுத்திய தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.