புதுதில்லி : இந்திய நாடாளுமன்ற மொத்தமுள்ள 226 ராஜ்யசபா எம்பிக்களில் 87 சதவிகிதம் பேர் (197எம்பிக்கள்) கோடீஸ்வரர்கள் எனவும் ஒரு ராஜ்யசபா எம்பியின் சராசரி சொத்துக்களின் மதிப்பு 79.54 கோடிகள் என்றும் அறிக்கைகள் வெளிவந்துள்ளது.
ஏ.டி.ஆர் நேசனே எலக்சன் வாட்ச் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ராஜ்யசபா எம்பிக்களில் தோராயமாக 31 சதவிகிதம் பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஆய்வுகளை நடத்தியுள்ளன.
இந்த அமைப்புக்கள் இரண்டும் 223 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 226 எம்பிக்கள் குற்றவியல் பின்னணி நிதிநிலை உள்ளிட்ட பிற பின்னணி விவரங்களை ஆய்வு செய்துள்ளன. தற்போது ராஜ்யசபாவில் ஒரு இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு எம்பிக்களுக்கு பிரமாண பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் நான்கு இடங்களும் வரையறுக்கப்படவில்லை. அதனால் அவற்றை பகுப்பாய்வு செய்யவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 226 ராஜ்யசபா உறுப்பினர்களில் 71 பேர் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளையும் 37 பேர் தங்களுக்கு எதிரான கடுமையான குற்றவழக்குகளையும் அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் மீது கொலை தொடர்பான ஐபிசி 302 பிரிவு வழக்குகளும் நான்கு எம்பிக்கள் மீது ஐபிசி 307 கொலைமுயற்சி ஹோடர்பான வழக்குகளையும் அறிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் நான்கு எம்பிக்கள் பெண்களுக்கெதிரான குற்றங்களை அறிவித்துள்ளனர்.
இந்த நான்கு எம்பிக்களில் ராஜஸ்தான் காங்கிரசை சேர்ந்த கே.சி வேணுகோபால் தன்மீது ஐபிசி 376 பாலியல் பலாத்கார வழக்கு என அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது. அந்த அறிக்கையின்படி காங்கிரசின் 31 எம்பிக்களில் 12 பேரும் பிஜேபியின் 85 எம்பிக்களில் 20 பேரும் ஏ.ஐ.டிசியின் 13 பேரில் மூன்றுபேரும் ஆர்ஜேடியில் இருந்து ஐந்துபேரும் சிபிஐஎம்மில் நான்குபேரும் ஆம் தமியில் மூன்றுபேரும் ஒய்.எஸ்.ஆர்.பி கட்சி எம்பிக்கள் மூன்றுபேரும் என்சிபியில் இருவரும் தங்களுக்கெதிரான கிரிமினல் வழக்குகளை பிராமண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர கடுமையான குற்றவழக்குகளை அறிவித்துள்ளவர்கள் சதவிகிதம் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக விவரங்களை குறிப்பிடுகையில் தமிழகத்தில் 18 பேரில் ஆறுபேர் எனவும் கேரளாவில் ஒன்பது எம்பிக்களில் ஆறு பேர் உத்திரபிரதேசத்தில் 31 எம்பிக்களில் ஏழுபேர் எனவும் மேலும் சில மாநிலங்களையும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.