புதுதில்லி : இந்திய குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வருகிற ஜூலை 18 அன்று நடைபெற உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயடு ஆகஸ்ட் 10 அன்று பதவி விலகவுள்ளார். அதனால் அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இந்திய துணை ஜானதிபதி வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி ஆகஸ்ட் 6 அன்று அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
இந்திய அரசையலமைப்பு சட்டம் 68 ஆவது பிரிவின்படி துணைஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் முன்னர் அந்த பதவிக்கான காலியிடத்தை பதவிக்காலம் முடியும் முன்னரே நிரப்பவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி ஆகஸ்ட் 10 அன்று துணைஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பதவிவிலகவுள்ள நிலையில் ஆகஸ்ட் 6 அன்று தேர்தல் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையர் அனுப் சந்திரபாண்டே மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் துணை ஜனாதிபதிக்கான தேர்த அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ்குமார் இறுதி செய்து அறிக்கை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியலமைப்பு சட்டத்தின் 324 ஆவது பிரிவு குடியரசு மற்றும் துணைத்தலைவர் தேர்தல் சட்டம்,
1952 குடியரசுத்தலைவர் தேர்தல் விதிகளின் படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான மேற்பார்வைகள் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை துணைத்தலைவரின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. 16 ஆவது குடியரசுத்துணை தேர்தலுக்கான அட்டவணையை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் பெருமை கொள்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.