தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு 600 க்கும் மேற்பட்டார் காய்ச்சலால் அவதி கண்டுகொள்ளாத அரசை கண்டிக்கும் பொதுமக்கள்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு,மலேரியா போன்ற பாக்டீரியாக்களை பரப்பும் கொசு உற்பத்தி ஆகிறது.இதனை அடுத்து திருப்பத்தூரில் அபிநதி என்ற 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார் சில நாட்களிலே குணமடைந்து வீடு திரும்பினார்.அடுத்த சில நாட்களிலே மீண்டும் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல்கான காரணத்தை உறுதிப்படுத்தினர்.அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அபிநிதியின் தாயார் மற்றும் 8 மாத கைக்குழந்தை ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்ப்பட்டு பெங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படுகிறது என பொது சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தினந்தோறும் காய்ச்சலினால் 2000 முதல் 3000 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பாக 600க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் மட்டுமே பாதிக்கப்பட்டுவுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யப்படாமல் டெங்கு கொசு பாதிப்பு இல்லை என விளம்பரம் செய்து வருகிறது. சில இடங்களில் மட்டும் மருந்து தெளிப்பான் மூலம் தெளிப்பது போன்று பிம்பத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் டெங்கு கொசு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொதுவிழியில் பரப்பி வருகிறார்கள்.திமுக அரசு தனது புகழுரையை பரப்புவதிலே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது என அரசியல் விமர்சனங்கள் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் விஸ்வரூபம் எடுக்கும் முன்னதாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு காட்டமாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.