உதயநிதியும் விஷாலும் பள்ளிப்பருவ காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளியில் படித்தது, பின்னர் லயோலா கல்லூரியில் படித்தது என இருவரும் நீண்ட வருட பழக்கம். விஷால் தனது படங்களை அதிகமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்வார். அது மட்டுமல்லாமல் உதயநிதியும் தனது நண்பராக நண்பராக மட்டுமல்லாமல் குடும்ப நண்பராக விஷாலை பாவித்து வந்தார். பொதுவெளிகளில் குறிப்பாக சினிமா நிகழ்ச்சிகளில் ஜாலியாக பேசிக் கொள்வதும் பின்னர் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பதுமாக பல இடங்களில் விஷால் உதயநிதி நட்பை பார்த்து உள்ளோம். ஆனால் கடந்த சில நாட்களாக அதுவும் குறிப்பாக விஷாலின் லத்தி படத்திற்கு பிறகு விஷால் உதயநிதிக்கு இடையேயான நெருக்கம் குறைந்தது எனவும் விஷாலுக்கும் உதயநிதிக்கு இடையில் மனஸ்தாபம் அதிகமானது எனவும் பல்வேறு சர்ச்சைகள் திரையுலகில் எழுந்தன.
இது மட்டுமல்லாமல் விஷால் பிரதமர் மோடியை எனக்கு பிடிக்கும் என ஒரு நேர்காணலில் கூறியது வேறு திமுக ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை, அது மட்டுமல்லாமல் ஒரு முறை விஷால் காசி- வாரணாசிக்கு சென்று வந்த பின் மோடியை எப்படி காசி நகரத்தை பிரமாதமாக மாற்றியுள்ளார் என புகழ்ந்து பேசி பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி என கூறியதையும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.இதன் காரணமாக கூட விஷால் உதயநிதிக்கு இடையேயான விரிசல் அதிகமானது என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரசியல் குறித்து விஷாலிடம் கருத்து கேட்கும் போது என்னிடம் இது போன்று எதுவும் கேட்காதீர்கள் என கூறிவிட்டு விஷால் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி உதயநிதி விஷால் இருவர் இடையேயான இடைவெளி அதிகமாகி வரும் நிலையில் தற்பொழுது விஷாலின் மார்க் ஆண்டனி படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் விஷாலுக்கு முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை மார்க்க ஆண்டனி படம் பெற்று தந்துள்ளது. இந்த மார்க் ஆண்டனி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பேசும்பொழுது ஒரு கோடி வைத்திருக்கிறேன், இரண்டு கோடி வைத்திருக்கிறேன், 4 கோடி வைத்திருக்கிறேன் என்றெல்லாம் யாரும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு படம் எடுக்கிறேன் என்று கூறி வராதீர்கள் இப்பொழுது நிலைமை சரியில்லை' என ஓப்பனாக பேசிய வீடியோ இணையங்களில் வைரல் ஆகிறது. இது குறித்து சில சினிமா வட்டாரங்களில் விசாரித்த பொழுது இப்பொழுது திமுக ஆட்சி நடந்து வருகிறது, குறிப்பாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் அதிக படங்களை கைப்பற்றுகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இல்லாமல் பிற தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாங்கி வெளியிடும் படங்களுக்கு திரையரங்குகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதை நம்பி பணத்தை முதலீடு செய்த நிறைய தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். விஷாலும் ஒரு தயாரிப்பாளர் என்கின்ற முறையில் இதனை உணர்ந்து உள்ளவர், அதனால் தான் விஷால் நண்பர் நிறுவனம் என்று கூட பாராமல் இப்பொழுது இரண்டு வருடம் அதாவது விஷால் குறிப்பிட்ட இரண்டு வருடம் என்பது திமுக ஆட்சி முடியவிருக்கும் காலம் அந்த இரண்டு வருடத்தை குறிப்பிட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதுவும் பட தயாரிப்புகளில் இறங்காதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து விஷால் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, இது உதயநிதியை குறிவைத்து சொன்னாரா அல்லது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை குறி வைத்து சொன்னாரா அல்லது வேறு ஏதும் காரணங்களுக்கு சொன்னாரா எனவும் விஷால் இதுவரை விளக்கம் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.