விஜய்யின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது உதயநிதிதான் காரணம் எனவும் அரசியல் காரணங்களுக்காகவும், லியோ படத்தின் வெளியீட்டு உரிமையை விஜய் கொடுக்காத காரணத்தினால் காவல்துறை மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் வெளிப்படையாக விமர்சனம் எழ தொடங்கிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் நேரடியாக போர் கொடி தூக்கி இருக்கிறார்கள். குடைச்சல் கொடுக்கும் திமுகவிற்கு ஏன் பாஜக மூலம் ஆப் செய்ய கூடாது என்ற கருத்தால் திமுக பெரும் ஷாக் கொடுத்து கொண்டு இருக்கிறது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள், இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. " ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா ? ". இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி ,வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது , அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது ஒருபுறம் என்றால் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை சென்ற போது மதுரையில் விஜய் ரசிகர்கள் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
(use that video )எங்கள் தலைவர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தபோது அண்ணாமலை மட்டும் தான் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார் அதனால் அவருடைய யாத்திரை மதுரையில் நடப்பத்தால் ஆதரவு தெரிவித்தோம் என குறிப்பிட்டனர்.இது அப்போதே அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இந்த சூழலில் விஜய் uthayanidhi🙏🏼இடையே உண்டாகி இருக்கும் மறைமுக மோதல் காரணமா விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர், இதே போன்று தொடர்ச்சியாக விஜய்க்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தால் போதும் திமுக ஆட்சி அம்போ எனவும் கடுமையாக சமுக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுக்காதீர்கள் அவர் மற்றும் மாற்றி அரசியல் முடிவு எடுத்தால் 2014-ல் தமிழகத்தில் என்ன நடந்தது என நினைவு இருக்கட்டும் விஜய் நினைத்தால் நாளையே பிரதமர் மோடியை சந்திக்க முடியும், ஏற்கனவே அண்ணாமலை திமுகவை கடுமையாக களத்தில் எதிர்த்து முன்னேறி வருகிறார் இந்த நேரத்தில் விஜய் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தால் திமுக கனவு ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்று மூத்த அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.