தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார் அப்போது பெரியாரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் எல்லோருக்கும் கொண்டு செல்லும் வகையில் பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிட இருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகளுக்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார் அவர் அறிவித்தது தான் பாக்கி பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு என்ன அவரை வைத்து திராவிட கழகம் பரப்பிய பொய்கள் என பலவற்றையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வெளுத்து எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழர்களுக்கு பெரியார் தெரிவித்த கருத்து எழுத்து சீர்திருத்தம் என்ற நூலை யூடுப்பர் ஒருவர் review செய்து வெளியிட்டார், அதில் பெரியார் செய்த கொடுமையை விலக்கிவிட்டு இறுதியில் புத்தகத்தை தூக்கி வீசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அட பாவிங்களா திமுக அரசு 5 கோடி செலவு செய்து பெரியார் கருத்துக்களை பல்வேறு மொழிகளில் பரப்ப போகிறோம் என்று சொன்னால் ஒரே வீடியோவில் 'சல்லி சல்லியாக' நொறுக்கி விட்டீர்களே என நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர்.
இருந்தாலும் வரி குதிரை க்கு பெரியார் கொடுத்த சீர்திருத்தம் பெரிய சீர்திருத்தம் தாம் பா... இதை உலகம் முழுவதும் பரப்பினால் நம்மை தான் கிறுக்கன் என்பார்கள் என சந்தோஷ் என்ற நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
கார்ட்டூனிஸ்ட் பாலா தனது முகநூலில் அடப்பாவிகளா.. ஈ.வெ.ராமசாமியார் பர்னிச்சரை இப்படி சல்லி சல்லியா உடைக்குறீங்களே.. நல்லா இருப்பீங்களா என நக்கலாக கேட்டுள்ளார்.வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.