24 special

அண்ணாமலை குறித்து வைரலாகும் வீடியோ... பெங்களூரு டேய்ஸ்..!

annamalai
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த வீடியோ தங்களிடம் இருப்பதாகவும் அவர் ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்ற வீடியோ தங்களிடம் இருப்பதாகவும் சூர்யா சேவியர் என்ற நபர் கொளுத்திப் போட்டார். அவர் பேசியது உண்மை என நம்பிய உடன்பிறப்புகளும் சில சமூக ஆர்வலர்கள் என சொல்லும் அரசியல் சார்புடைய நபர்களும் வேகமாக அவரது பேச்சை பரப்பினர்.


இந்த சூழலில்  தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை தான் குறித்த வீடியோ இருந்தால் அதை உடனடியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவும் உடனடியாக அதை நானே வந்து பார்ப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் அண்ணாமலையை உரசிப்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால்தான் அவர்கள் தன் மீது இப்போது ஒரு குற்றச்சாட்டை பரப்புவதாகவும் அண்ணாமலை விளக்கம் கொடுத்திருந்தார், இதையடுத்து போலி செய்தியை பரப்பிய நபர்களும் போலி செய்தியை பரப்பிய சூர்யா சேவியர் என்ற இரண்டாம்தர மனிதனும் அமைதியானார்கள்.

இந்த நிலையில்தான் பாஜகவினர் அண்ணாமலையின் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர் அதாவது அவர் போலீஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியபோது செய்த நற்பண்புகளால் ஈர்க்கப்பட்ட நபர்கள் அண்ணாமலையின் புகைப்படத்தை அவரது கடையில் வைத்து இருந்தனர்.

இந்த வீடியோவை பகிர்ந்து இதுதான் பெங்களூரில்   அண்ணாமலைக்கு கிடைத்த மரியாதை எனவும்,  அண்ணாமலையை  உரசிப் பார்க்க முடியாது "சொக்கதங்கம்" எனவும் பாஜகவினரும் அண்ணாமலை ஆதரவாளர்களும் இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.வைரலாக பரவும் அண்ணாமலை வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது