இந்தியா : இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலும் இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் மிகப்பெரியதுமான ஐஎன்எஸ் விக்ராந்த் 75ஆவது சுதந்திரத்தினத்தை ஒட்டி கடலிறங்கப்போவதாக கப்பற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த போர்க்கப்பல் இந்திய கடற்படைக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளனர். பணியமர்த்தப்படும் இறுதி தேதிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமானம் தாங்கி கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்படையின் திறன்களை வலுப்படுத்தும் என தெரிகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சீனாவிடம் மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. அதில் புஜ்ஜியான் எனப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல் சமீபத்தில் தான் கடற்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இரண்டாவது மற்றும் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை பிரிவான கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் (DND) வடிவமைக்கப்பட்டது.
மேலும் அரசாங்கத்திற்கு சொந்தமான கொச்சின் ஷிப் யார்டில் இந்த விக்ராந்த் கட்டப்பட்டது. இந்த கப்பல் கட்டுவதற்கான பணிகள் 2009ல் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் கப்பலின் பாகங்கள் 75 சதவிகிதம் உள்நாட்டிலேயே வாங்கப்பட்டுள்ளது. இந்த விக்ராந்த் 37500 டன்கள் எடையை தூக்கி சுமந்து செல்லவல்லது.
இந்த கப்பலில் தோராயமாக 30 போர்விமானங்களை டெக்கில் நிறுத்தலாம் என கருதப்படுகிறது. விக்ராந்த் போர்க்கப்பலில் மிக் 29கே போர்விமானங்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 1961 முதல் 1997 வரை இயங்கிவந்த விக்ராந்த் கப்பலின் நினைவாக அதே பெயர் மீண்டும் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலின் நீளம் 262 மீட்டர் என சொல்லப்படுகிறது.
மேலும் இதன் உயரம் 62 மீட்டர் மற்றும் 59 மீட்டர் உயரம் கொண்ட கற்றைகள் கொண்டது ஆகும். ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில் 14 தளங்கள் உள்ளன. இதில் ஐந்து மேல்கட்டமைப்புகள் 2300 பெட்டிகள் மற்றும் 1700 பேர் கொண்ட குழுவினருக்கு இடமளிக்கமுடியும். இந்த கப்பலின் வேகம் அதிகபட்சமாக 28 நாட்டிக்கல் மற்றும் 18 நாட்கள் பயண வேகம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.