24 special

இனி மைனர்களுக்கு பாஸ்போர்ட் ஈசியாக விண்ணப்பிக்கலாம்..!

Minor passport
Minor passport

புதுதில்லி : பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது 18 வயதிற்குட்பட்ட யாவரும் மைனர் என கருதப்படுகிறார்கள். தற்போது மைனர்களுக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இந்திய அரசு புதிய வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டுள்ளது. 


அதன்படி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் மைனர் தனக்கென தனி பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். தந்தையின் பாஸ்போர்ட்டில் இனி பெயரை இணைத்துக்கொள்ள முடியாது. 36 பக்கங்கள் கொண்ட கையேடு மைனர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கார்டியன் அல்லது பெற்றோர் அனுமதியின்றி மைனர்கள் பாஸ்போர்ட் வாங்க முடியாது.

இதற்க்கு தேவையான ஆவணங்கள் இருப்பிட சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று. ஒரு மைனரின் பாஸ்போர்ட் இனி ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் அல்லது 18 வயதுவரை செல்லுபடியாகும். அல்லது இரண்டில் எது முன்னர் வருகிறதோ அதுவே எடுத்துக்கொள்ளப்படும். 15 வயது மைனர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கையில் அவரது பாஸ்போர்ட் 18 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும்.

குழந்தைகள் வகையை பொறுத்து பாஸ்போர்ட் கட்டணங்கள் மாறுபடும். மேலும் பத்து ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட்டையும் விண்ணப்பிக்கலாம். இந்த பத்து ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 18 வயதிற்குட்பட்டோருக்கான பாஸ்போர்ட் கட்டணத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுகள் காலவரம்பிற்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் போலீசாரின் விசாரணைக்கு பிறகே வழங்கப்படும்.

மைனருக்கான பாஸ்போர்ட்டை இணையத்தில் விண்ணப்பிக்க https://www.passportindia.gov.in என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும். அதில் புதிய பயனர் என்பதை பதிவுசெய்து உள்ளே நுழைய ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கவேண்டும். மைனாரின் அனைத்து விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவேண்டும். 

பிறகு அந்த படிவத்தை சமர்ப்பித்தவுடன் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாஸ்போர்ட் விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். மேலும் இந்த நடைமுறை பெற்றோர்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் இருக்கும் பலகட்ட சிரமங்களை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.