ஒரு பக்கம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை இரண்டாவது நாளாக சோதனையை தீவிர படுத்தி இருக்கும் நிலையில் தற்போது களத்தில் சொல்லி வைத்தது போன்று அமலாக்கதுறையும் இறங்கி இருப்பது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.மேலும் விசாரணையில் 3 ஜோடி ஹார்ட் டிஸ்க்களை அமலாக்கதுறை எடுத்து சென்ற சம்பவம் தான் எவ வேலுவிற்கு விழுந்த பெரும் அடியாக பார்க்க படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி,நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கன்களை விட அதிகமான லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாகும் புகார்கள் எழுந்தது.புகாரைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் ஸ்டாக் பாயிண்ட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் 5 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்ஏற்கனவே இருமுறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அமலாக்க துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு பேர் என 10 பேர் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தற்போது மணல் குவாரிகளில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறைக்கு சோதனை நடத்தவே அதிகாரம் உள்ள நிலையில் ஒருவரை கைது செய்ய அதிகாரம் இல்லை அதே நேரத்தில் அமலாக்க துறைக்கு யாரையும் எங்கும் நுழைந்து கைது செய்ய அதிகாரம் இருக்கிறது எனவே எ வ வேலு விஷயத்தில் பக்கத்தில் அமலாக்கதுறை உள்ளே இறங்கி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஆளும் திமுக வட்டாரத்தில் உண்டாக்கி இருக்கிறது.ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் 100 நாட்களுக்கு மேலாக கம்பி எண்ணி வரும் நிலையில் அதே நிலை எ வ வேலுவிற்கும் வருமா என்பது சோதனையின் முடிவில் தெரிந்து விடும் நிலை உருவாகி இருக்கிறது.