தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும், கோவையில் அமைச்சருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் திமுக நிர்வாகியான மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் 80 இடத்தில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் முக்கிய பட தயாரிப்பாளரும் வினோகஸ்தராகவும் அபிராமி ராமநாதன் உள்ளார்.
இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை செய்து வருகின்றனர். தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார் அபிராமி ராமநாதன். சென்னையில் பிரபல வணிக வளாகமான அபிராமி மால் இவருக்கு சொந்தமானது. தற்போது அபிராமி மால் இடிக்கப்பட்டு அங்கு கட்டடம் கட்டும் டெண்டர் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் சோதனை செய்ததில் அபிராமி ராமநாதன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், தங்க நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். நேற்று முதல் நடைபெற்ற சோதனையில் இன்று அபிராமி ராமநாதன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டது தியேட்டர் உரிமையாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மேலாளர் மோகன் என்பவருடைய வீட்டிலும் தற்பொழுது வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ராமநாதனை போயஸ் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிப்பு தான் தெரிய வரும் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று தெரியவரும்.தமிழகத்தில் சமீப காலமாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்தும் விசாரணைக்கு அழைத்து சென்றும் வந்தனர். தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் பிரபல படத்தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் தமிழக திரையுலகில் கலக்கத்தை உண்டாகியுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடத்தில நடைபெறும் இந்த சோதனையில், வருமான வரித்துறை முக்கியமாக ரியல் எஸ்டேட் மற்றும் காண்ட்ராக்ட் எடுக்கும் நிறுவதை குறிவைத்து வருகிறது. இப்போது அப்பாசாமி ரியல் எஸ்டேட் மூலம் அபிராமி ராமநாதன் வீட்டில் சோதனை நடைபெறுவதால் இவருக்கும் அமைச்சருக்கு எதாவது லின்க் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.