24 special

மக்களை அதிர செய்த விவகாரம்...! மீண்டும் நடத்த வேண்டும் அண்ணாமலை ஆளும் கட்சிக்கு செக்...!

Stalin ,stalin
Stalin ,stalin

தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, நில அளவையாளர் தேர்வில், காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றதால், இத்தேர்வில் முறை கேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது. 


அதனை தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. அதில் ஒரே பயிற்சி மையத்தில் இருந்து சுமார் 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து சுமார் 2,000 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்த தகவல், இதற்காகவே தயாரான பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கி உள்ளது.

ஏற்கனவே நில அளவர் தேர்வில் காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் தேர்ச்சி பெற்றதால், அதற்கு பல்வேறு இளைஞர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. பின்பு இதுகுறித்து விசாரனை மேற்கொள்ளவிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்திருந்தது. 

“தமிழக இளைஞர்கள் குரூப் 4 தேர்விற்காக, 8 மாதம் காத்திருந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது அரசுப் பணிக்காக அயராமல் உழைத்த, தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக விசாரனை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், குரூப் 4 தேர்வை திரும்ப நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்”.

மேலும்  “தமிழகத்தில் அரசுப் பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்”.

‘அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாரதிய ஜனதா கட்சியின் மீது நல்ல நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக மக்கள் கருதுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது’.