24 special

தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி..!

Edappadi palanisamy ,stalin ,annamalai
Edappadi palanisamy ,stalin ,annamalai

அண்ணாமலை தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்த செய்தி அண்ணாமலை ஆதரவாளர்கள் உற்சாகமடைய வைத்துள்ளது.தமிழக அரசியல் தற்பொழுது திருப்புமுனையை ஏற்படுத்தும் காலமாக இருந்து வருகிறது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் இத்தனை நாள் வரை திராவிட கட்சிகள் ஆண்டு வந்த நிலையில் தமிழக பாஜக தற்பொழுது திராவிட கட்சிகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அதுவும் தமிழக பாஜகவின் வளர்ச்சி முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். அதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை அண்ணாமலை கையில் எடுத்ததுதான். இளைஞர், காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரி, மேலும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என பல பாசிட்டிவான விஷயங்கள் அண்ணாமலை மீது இருந்துள்ளதால் அவரை தமிழக பாஜக பொறுப்பில் அமர்த்தினர் ஜே பி நட்டா, அமித்ஷா, மோடி ஆகியோர்.


இப்படி டெல்லி ஆசிர்வாதத்தால் தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பை அண்ணாமலை கையில் எடுத்ததற்கு பிறகு பம்பரமாக சுழல ஆரம்பித்தார். அவர் பம்பரமாக சுழல ஆரம்பித்ததன் விளைவு தமிழக அரசியலில் மையப் புள்ளியாக தமிழக பாஜக மாறிப்போனது. அண்ணாமலை எது பேசினாலும் அரசியல் என்கின்ற ரீதியில் தமிழக அரசியலில் பாஜக அடுத்த கட்டத்தை தாவி பிடித்தது. இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது நமது தலைமையில் புதிய கூட்டணி அமைத்தால் மட்டுமே பாஜக அடுத்த அடியை வைத்து வைக்கும் என சமயோசிதமாக யோசித்து கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டு கடந்த வாரம் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அதற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பல எதிர்ப்பு வெடித்தன.

குறிப்பா கூற வேண்டும் என்றால் சிலர் வெளிப்படையாகவே அண்ணாமலையின் இந்த முடிவை விமர்சித்து பேசினார். அதிமுக கூட்டணியில் இருப்பது தான் சரி அதிமுக கூட்டணியை விட்டு வெளியே செல்வது சரியல்ல என்று ரீதியில் பல நிர்வாகிகள் வெளியில் கூறி வந்தனர். ஆனால் கட்சித் தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கையாலும், பாஜக வளர்ந்து விட்டது என்ற நம்பிக்கையிலும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை டெல்லி மேலிடத்தின் ஆசிர்வாதத்தையும் வாங்கி வந்தார். டெல்லி சென்றவர் தமிழகத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தமிழக பாஜக அடுத்த நிலைக்குச் செல்ல தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் மட்டுமே முடியும் என்பதை கூறி விளக்கி விட்டு அதற்கு ஒப்புதலும் மட்டுமன்றி பாராட்டையும் வாங்கி வந்துள்ளார்.

அண்ணாமலை வந்த வேகத்தில் நேரடியாக மதுரை விமான நிலையம் சென்று தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி தற்பொழுது கூண்டை விட்டு வெளியே வர தயாராகிவிட்டது கிளி பறக்க தயாராக உள்ளது பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது, தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது. இனி கூண்டுக்குள் இருக்கும் கிளியை போன்று இல்லாமல் கூண்டை விட்டு வெளியே பறக்கும் கிளியாக தமிழகத்தில் பாஜக மாறி உள்ளது' என அண்ணாமலை பேசியது அண்ணாமலை ஆதரவாளர்களை மட்டுமல்லாது மக்களிடத்திலும் தற்பொழுது பரவலாக பேசு பொருளாக மாறிவிட்டது.

ஏனெனில் இத்தனை நாள் வரை கூட்டணியில் இருந்து கொண்டு ஒரு சில விஷயங்களை சுதந்திரமாக செய்ய முடியவில்லை, கூட்டணி தர்மத்திற்காக நிறைய விஷயங்கள் பேச முடியவில்லை என பாஜகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் நினைப்பு ஏற்பட்டு வந்த காரணத்தினால் தர்மசங்கடத்தை அனுபவித்தார்கள் இனிய அப்படி தர்ம சங்கடத்தை அனுபவிக்க தேவையில்லை பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து நம் எண்ணம் படி நமது இஷ்டப்படி அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தை அண்ணாமலை தற்போது விதைத்துள்ளார் என அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ஆர்வமுடன் கூறுகின்றன.

இந்த வேகத்தில் இப்படியே சென்றால் வரும் 2024 தேர்தல் மட்டுமல்ல 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் பிடித்தே தீரும் என குஷியுடன் அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி செல்ல தயாராகி விட்டனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். தமிழக பாஜக ஒரு படி முன்னேறிவிட்டது!