
டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட நமது அரசியல் சாசனத்தின் 25-ஆவது பிரிவு, மத சுதந்திரம் குறித்து விளக்குகிறது. பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக மதத்தைப் பயன்படுத்துவதன் அரசியலமைப்பு தன்மை குறித்த ஒரு பெரிய கேள்வி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுக்கள் கோருகின்றன. 1950 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த அரசியலமைப்பு உத்தரவு, இந்துக்களுக்கு மட்டுமே எஸ்சி அந்தஸ்தை கட்டாயமாக்குகிறது. இடஒதுக்கீட்டின் நோக்கங்களுக்காக, சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களும் இந்துக்களாகக் கருதப்படுகிறார்கள்
மேலும் கிறிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாம் மதத்தை தழுவிய சிலர் ஹிந்துக்கள் எனக் கூறிக்கொண்டு, பெயரை மாற்றாமல் அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். இதனால், சமூகத்தில் உண்மையாக பின்தங்கிய சிலருக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை.இப்படி அரசின் சலுகைக்காக, கிறிஸ்துவர்கள் என்பதை மறைப்பவர்கள், 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' என அழைக்கப்படுகின்றனர்.மேலும் இந்துக்களின் பட்டியிலானதவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மதம் மாறிய பின்னரும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.இது சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், இந்த 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' விவகாரத்தை மஹாராஷ்டிர சட்டசபையில் பாஜ., - எம்.எல்.ஏ., அமித் கோர்கே எழுப்பினார். அப்போது, மத சுதந்திரத்தை, 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதில் அளித்து பேசியதாவது:எஸ்.சி., ஜாதி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என, கடந்த 2024, நவம்பர் மாதம் 26ல் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தினர் அல்லாதோர் எஸ்.சி., ஜாதி சான்றிதழை முறைகேடாக பெற்றிருந்தால், அவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்படும். சான்றிதழும் ரத்து செய்யப்படும். அரசு வேலை உள்ளிட்ட பலன்களை பெற்றிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைகேடாக பெற்றிருந்த ஜாதி சான்றிதழை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அது செல்லாததாக அறிவிக்கப்படும். ஒருவர் எந்த மதத்தையும் தழுவலாம். அதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதேபோல் முழு சம்மதத்துடன் ஒருவரை மதமாற்றமும் செய்யலாம்.
ஆனால், வற்புறுத்தியோ, மோசடி செய்தோ, ஆசை காண்பித்தோ மதமாற்றம் செய்வது குற்றம். இதை சட்டமும் அனுமதிக்காது. வற்புறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படும்.மேலும் சம்பந்தப்பட்ட அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க, டி.ஜி.பி., தலைமையில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மோசடியாகப் பெற்ற சாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சலுகைகளைப் பெற்றவர்களிடமிருந்து பணப் பலன்களை மீட்க பரிந்துரைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார் மதம் மாறியவர்களால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்த மத சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
பட்டியல் சாதி இடஒதுக்கீடு என்பது இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். விருப்பத்துடன் மதமாற்றம் செய்யலாம். ஆனால், கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.