
உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் வகையில் தற்போது இந்தியா தனது ராணுவ பலத்தை கூட்டி வருகிறது. 6 ஆம் தலைமுறை ஆயுதங்களை தயாரித்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் இராணுவ ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இதற்கு முன்னர் வெளிநாடுகளிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்தது. தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது. 90 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.
டைட்டானியம் உற்பத்தியில் ஒருசில நாடுகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. இப்போது இந்தியாவும் அதில் இணைந்துள்ளது. டைட்டானியம் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. டைட்டானியம் உலோகம் வலுவான மற்றும் இலகுரக தன்மை கொண்டது. . இது ராணுவத்தில் பல இடங்களில் முக்கிய பங்காற்றுகிறது. விமானங்கள், குண்டு தடுப்பு கவசங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்க டைட்டானியம் பயன்படுகிறது. இது காலநிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் இந்த உலோகம் எளிதில் அழியாது , அதிக அளவிலான வெப்பத்தையும், சீரற்ற வானிலையையும் தாங்கும் சக்தி கொண்டது. அதனால்தான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ராணுவத்தில் டைட்டானியம் உலோகத்தை மிகவும் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகிறார்கள். .
டைட்டானியம் உலோகம் “எடை குறைவு, வலிமை அதிகம், அழியாத தன்மை” என்பவை டைட்டானியத்தை ராணுவத்துக்கே உரிய உலோகமாக மாற்றியுள்ளன. இந்த நிலையில் இந்திய ராணுவம் இதை அதிகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் பாதுகாப்பு துறையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் லக்னோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘பிடிசி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், இந்திய ராணுவத்தின் முக்கிய அங்கமாக உள்ள பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம், கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்கிறது. இதுவரை இவை போன்ற உற்பத்திக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருந்தது. தற்போது, PTC நிறுவனம் இதனைச் சொந்தமாக உற்பத்தி செய்யத் தொடங்கியிருப்பது, நாட்டின் பாதுகாப்பு துறைக்கு புதிய பாய்ச்சலை கொடுத்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்த பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்தப் பொருள்கள் மிக அவசியமானவை என தற்காப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே டைட்டானியம் உற்பத்தி திறன் கொண்ட நாடுகளாக இருந்தன. தற்போது இந்தியா, இந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் கட்டுவதற்கும், போர் விமானங்களை உருவாக்குவதிலும் டைட்டானியம், கலப்பு உலோகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன“ டைட்டானியம் என்பது எஃகை விட லேசானதும், அதிக வலிமை கொண்டதுமான உலோகமாகும். மேலும் இது அரிப்பு எதிர்ப்பு திறனும், அதிக வெப்பநிலை தாங்கும் திறனும் கொண்டதால், விமானத் தொழில்நுட்பத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பண்புகள் எரிபொருள் செயல்திறன் மற்றும் விமானங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன. இது குறித்து PTC நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் தர இயக்குநர் அலோக் அகர்வால் கூறுகையில், “இந்த ஆண்டின் இறுதிக்குள், ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 6,000-6,500 டன்களை எட்டும் என நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.இந்த முன்னேற்றம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளவில் முக்கிய உற்பத்தியாளர் நாடாக இந்தியாவை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.