பாஜக மாவட்ட தலைவராக இருந்த சரவணன் திடீர் என அமைச்சர் தியாகராஜனை சந்தித்து வெளியேறிய நிலையில் அவர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்க படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், இந்த சூழலில் பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் பாஜகவில் இருந்து சரவணன் வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தது பின்வருமாறு :- பல மாநிலத்தில் இதை விட துரோகங்களை பார்த்தாயிற்கு.இப்பவும் சொல்கிறேன் 4 பேர் போவான்,4 பேர் வருவான் ஆளானப்பட்ட எடியூரப்பாவே கட்சியை விட்டு வெளியே போய் தனிக்கட்சி துவங்கியவர்தான்.
இங்கே யுத்தமென்பது எதிரியின் வாளுக்கு பதில் சொல்வது மட்டுமல்ல கண்ணிமைக்கும் நேரத்தில் முதுகில் குத்தப்படும் துரோக வாட்களையும் சேர்த்தேதான் எதிர்கொள்ள வேண்டும்.அரசியலில் இவை எல்லாம் எதார்த்தம்.
திமுக Vs பாஜக என்பது இன்னும் பலப்படுகிறது,அது தனிப்பட்ட விரோத அரசியலாக வளர ஆரம்பிக்கிறது.இது பாஜகவிற்கு இறுதியாக உதவுமே தவிர வீழ்ச்சியாக இருக்காது..நாலு பேர் வருவார்கள்,நாலுபேர்
போவார்கள்..இது இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை.ஆனால் அந்த சூழ்நிலை மிக முக்கியமானது..ஒரு நெருக்கடியில் மூலப்படை மட்டும்தான் நிற்கும்,கூலிப்படை தாக்கு பிடிக்காது என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.