24 special

பாஜகவிலிருந்து விலகுவதாக வெளியான செய்தி நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Nayanar nagendran
Nayanar nagendran

நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து விலகுவதாக ஜூனியர் விகடன் பெயரில் போலியாக நியூஸ் கார்டு ஒன்று வைரலான நிலையில் அது குறித்து தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார், இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :-


ஜுனியர் விகடன் பத்திரிக்கை பெயரில் எனது புகைப்படத்தோடு எனது பெயரை இணைத்து  நான் அறிக்கை  வெளியிட்டது போல ஒரு தவறான செய்தி சமூக வலைதளங்களின்  மூலம் சில விஷமிகளால் பரப்பப்பட்டு  வரும் செய்தி என்னை மிகுந்த வேதனையடைச்செய்தது.


இன்று போல் என்றும் தேச வளர்ச்சிக்கு பா.ஜ.க.விலிருந்து பாடுவது  என்பதே எனது முடிவு.அனைவருக்கும் நமது தாய் திருநாட்டின் 75வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.

பாரத அன்னையின் புகழ் ஓங்குக...ஜெய்ஹிந்த்... வந்தே மாதரம்...வாழ்க, வளர்க பாரதிய ஜனதா கட்சி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.