தமிழக அரசியலில் பாஜகவால் கூட்டணி இல்லை என்றால் ஒன்றும் சாதிக்க முடியாது என கூறியவர்களுக்கு சிறப்பான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது.,
எம்ஜிஆருக்கு கருணாநிதி அநீதி இழைத்தார்,ஜெயலலிதாவை கருணாநிதி அவமானப்படுத்தினார் என்ற புள்ளிதான் அந்த தலைவர்களுக்கு திமுகவை எதிர்க்கும் தார்மீக நியாயத்தை உண்டு செய்தது.
இன்றைய நிலையில் திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக மட்டுமே இனி அறுவடை செய்ய முடியாது.எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் திமுக எதிர்ப்பின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இன்றைய அதிமுகவின் மீது படிப்படியாக குறைந்துவருகிறது.
அதிமுக உட்கட்சி பிரச்சனை இல்லாமல் NDA கூட்டணிக்குள் தொடர்ந்தால் 2024 - 2026 இரண்டு தேர்தலும் திமுக கூட்டணிக்கு மிக சவாலானதாக இருக்கும்.அப்படி நடக்கூடாது என்றறிந்த யாரோ போட்ட திட்டம்தான் அதிமுகவின் பிளவு என்பதாக தெரிகிறது.
2024 தேர்தல் யார் பிரதமர் என்பதற்கானது,அங்கே ஒன்று மோடியை ஆதரிக்க வேண்டும் அல்லது ராகுல்காந்தியை ஆதரிக்க வேண்டும்.காங்கிரஸ் தன்னுடைய பார்கெயினிங்கை திமுகவிடம் ஏற்ற அதிமுகவை பயன்படுத்துமே அல்லாமல்,ஒரு போதும் EPS தலைமையை ஏற்று கூட்டணிக்கெல்லாம் வராது..
இப்படி நிலைமை இருக்கும் போது,பாஜகவோடு கூட்டணியை முறித்துக்கொள்ள அதிமுக தயாரென்றால் அதன் நோக்கமென்ன? கொங்கு பகுதியில் பாஜகவிற்கு எம்பி கிடைக்கக் கூடாது என்பதாகத்தான் அது இருக்க முடியும்.ஜனாதிபதி தேர்தலை ஒட்டி தலைமை பிரச்சனையை உண்டு செய்ததே,2024 தேர்தலுக்கான மிரட்டல் சமிக்கையைத்தான் EPS தந்தார்..
ஆனால் ஒன்றை சிந்திக்க மறுக்கிறார்கள்.அதிமுக - திமுக அல்லாத மூன்றாவது அணியை பாஜக 2014 ல் பாஜக அமைத்த போதே தன்னுடைய வலுவான தடத்தை பதித்தது..
கன்னியாகுமரியில் நான்காவது இடத்துக்கு திமுக தள்ளப்பட்டது.கோவையிலும்,வேலூரிலும் மூன்றாவது இடத்திற்கு சென்றது திமுக கூட்டணி.பாஜக பலமான இரண்டாமிடத்தை பெற்றது..
அதிமுக - திமுக இல்லாமலே NDA கூட்டணி 18.5% வாக்குகளை பெற்றது.அந்த கூட்டணியில் பாஜக 5.48% வாக்குகளை தொட்டது,அதனுடைய Contested avg - 23%..
ஆனால்,2019 தேர்தலில் அதிமுக கூட்டணியால் பாஜகவிற்கு எந்த நன்மையும் இல்லை.அதுமட்டுமில்லாமல்,2019 - 2021 ல் பாமகவுக்கு கீழே பாஜகவை வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார்.இத்தனைக்கும் 2019 மோடிக்கான தேர்தல்.
ஆனாலும் காங்கிரஸிற்கு எதிராக நாமொரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதையெல்லாம் மோடி கண்டுகொள்ளவில்லை.தமிழகத்தில் நமக்கான நேரம் இதுவல்லவென கடந்தார்.ஆனாலும் 2019 ல் மோடியின் வெற்றிக்கு EPS னால் உதவ முடியவில்லை..
EPS - OPS ஒன்றாக இருந்தே 2019 செய்ய முடியாத போது,அதிமுகவின் சமூக ரீதியான பிளவால் இனி சரிசெய்ய முடியாத இடத்தை நோக்கி அது நகருவதாக தெரிகிறது.இந்த நேரத்திலும் தன்னுடைய விடாபிடித்தனங்களை கடைபிடிப்பதன் நோக்கம் 2024 ல் பாஜக இங்கே வெற்றி பெற உதவக்கூடாது பங்காளி திமுக வென்றால் கவலையில்லை என்பது போலவே உள்ளது.
கட்சிக்குள் இருக்கும் அதீத அழுத்தம்,குழப்பம்,பாஜகவை ஒரு பூதம் போல காட்டும் சிறுபான்மை கருத்துருவாக்க லாபி என எல்லாவற்றுக்கும் EPS காதுகொடுக்கிறார் என யோசிக்க வேண்டியதாக உள்ளது.
என்ன இருந்தாலும் 2024 ல் உறுதியாக மோடி வென்று வரப்போகிறார்.இந்த நிலையில் பாஜக ஒரு தனி அணியை 2014 போலவே உருவாக்க நினைத்தால் உறுதியாக அவர்கள் இரண்டாவது இடத்தை அடைய எல்லா வாய்ப்பும் உள்ளது.இதற்கும் பாஜக தயாராக இருப்பது போலவே அமித்ஷாவின் பேச்சுகள் உள்ளது..பார்ப்போம் என குறிப்பிட்டு இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன்.
அரசியலின் நாகர்வுகளை துல்லியமாக கணிக்கும் ஒரு சில அரசியல் விமர்சகர்களில் சுந்தர் ராஜ சோழனும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது.