24 special

வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடி.. 5000 ஆண்டு கால சஸ்பென்ஸ்... அயோத்தியில் மோடி ஏற்றிய ராம ராஜ்ஜய கொடியின் ரகசியம்

PMMODI
PMMODI

மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமர் அவதாரமாகும். ராமர் அவதரித்த அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமருக்காக மிக பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.அந்தக் கோயி​லின் உச்​சி​யில், ‘தர்ம துவாஜா’ என்ற காவிக் கொடியை பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​றி​னார். பண்​டையக் காலம் முதல் கோவி​தாரா (மந்தாரை) என்ற மரத்​தில் ஏற்​றப்​படும் இது ‘கோ​வி​தாரா கொடி’ என்​றழைக்​கப்​படு​கிறது. இது, கலி​யுகத்​தில் கூட வெள்ளி யுகத்​தின் உணர்​வைத் தூண்​டும் எனக் கருதப்​படு​கிறது. 


அயோத்தியில், 161 அடி உயர ராமர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்டுள்ள காவி கொடி, 22 அடி நீளமும், 11 அடி அகலமும் உடையது. அனைத்து பக்கமும் சுழலக் கூடிய வகையில் முக்கோண வடிவில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராமரின் வீரம், பெருமையை குறிக்கும் வகையில், காவி கொடியில் ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் ராம ராஜ்யத்தின் மாநில மரம் என்று விவரிக்கப்படும் கோவிதார மரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இக்​கொடியைப் பற்​றிய பல செய்திகள் தற்போது வெளி வர தொடங்கி உள்ளது.  

வால்​மீகி ராமாயணத்​தின் அயோத்தி காண்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளது. இந்​தக் கொடியை ஏற்ற முடிவு செய்​ததன் மூலம் ​ராமஜென்​மபூமி கோயில் அறக்​கட்​டளை​யினர், அயோத்​தியை கவுர​வித்​திருப்​ப​தாக​வும் கருதப்​படு​கிறது. கோவி​தாரா மரம் சனாதன கலாச்​சா​ரத்​தின் விலைம​திப்​பற்ற பொக்​கிஷ​மாக​வும் மதிக்​கப்​படு​கிறது.

இது அயோத்​தி​யின் அடை​யாள​மாக​வும், பண்​டைய பாரம்​பரிய​மாக​வும் இருந்து வரு​கிறது. இருப்​பினும், ரகு வம்​சத்​தின் சின்​ன​மான இந்த அரசக் கொடி நவீன இந்​தி​யா​வில் மறக்​கப்​பட்​டது. இந்த மரத்​தின் கொடி பற்றி லலித் மிஸ்ரா உள்​ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்​கள் ஆய்வு செய்​துள்​ளனர். தொடக்​கத்​தில் கச்​ச​னார் மரம்​தான், ரகு வம்ச மரம் எனக் கருதப்​பட்​டது. ஆனால் ஆராய்ச்​சிக்​குப் பிறகு அது, கோவி​தாரா என கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.இதன் காரண​மாகவே, ஸ்ரீ ​ராமஜென்​மபூமி கோயில் அறக்​கட்​டளை​யினர் இந்​தக் கொடியை ஏற்ற முடிவு செய்​துள்​ளனர். கோவி​தாரா மரத்​தின் படத்​துடன் சூரியன் மற்​றும் ஓம் சின்​னங்​களும் இந்​தக் கொடி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தக் கொடியை அகம​தா​பாத்​தில் உள்ள ஒரு பாராசூட் தயாரிப்பு நிறு​வனம் வடிவ​மைத்​துள்​ளது. இதன் துணி நைலான் மற்​றும் பட்டு கலவை​யி​னால் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.ராமர் கோயில் பிராண பிர​திஷ்டை​யின்​போது, அதன் வளாகத்​தில் கோவி​தாரா மரங்​கள் நடப்​பட்​டன. அவை இப்​போது சுமார் 8 முதல் 10 அடி உயரம் வளர்ந்​துள்​ளன. கோவி​தாரா தொடர்​பான ஆராய்ச்​சி​யின்​படி, மந்​தாரை மரத்​தின் பண்​பு​களை பாரிஜாத மரத்​துடன் இணைத்து வளர்க்​கப்​பட்​டது.முதல் கலப்​பின தாவர​மாகக் கருதப்​படு​கிறது. 15 முதல் 25 மீட்​டர் உயரம் வளரும் இந்த மரம், பூக்​கும் மற்​றும் பழம் தரும் மரமாகும். இது கச்​சனார் மரத்​தின் பூக்​களை ஒத்த ஊதா நிற பூக்​களைத் தரு​கிறது. இதன் பழம் சுவை​யாக​வும் சத்​தான​தாக​வும் கருதப்​படு​கிறது. 

மேலும் கொடியேற்றி பேசிய  பிரதமர் மோடி அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கொடி அல்ல, நாட்டின் கலாசார அடையாளம். நாட்டின் கலாசார விழிப்புக்கு இன்றைய நாள் சாட்சியாக உள்ளது. இதன் மூலம் பல நுாற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வருகிறது; 500 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது. என்றார்..