24 special

தமிழகம் குறித்து ஷாக்கிங் ரிப்போர்ட் வெளியானது! காணாமல் போன நகரங்கள்! உலக அளவில் தலை குனிந்த தமிழகம்

MKSTALIN,HIGHCOURT
MKSTALIN,HIGHCOURT

உலகின் நகரங்களை தரவரிசைப்படுத்தும் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது.பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, போக்குவரத்து வசதி, தூய்மை, தொழில் வாய்ப்பு, அடிப்படை உட்கட்டமைப்பு பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.ஆனால், இந்த ஆண்டு வெளியான பட்டியலில்தமிழகத்தின் எந்த நகரமும், தலைநகர் சென்னை கூட உலகின் சிறந்த 100 நகரங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை.இந்தத் தகவல் தற்போது பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.


தென்மேற்கு ஆசியாவின் முக்கிய தொழில்நுட்ப மையமாக கருதப்படும் சென்னை கூட, போக்குவரத்து நெரிசல், மழைக்கால வடிகால் குறைபாடு லஞ்சம் லாவண்யம் , பொது சுகாதார சவால்கள், மற்றும் நீண்டகால உட்கட்டமைப்பு பிரச்சினைகளை இன்னமும் முழுமையாக சரி செய்ய முடியாத நிலை என பல்வேறு பிரச்சனைகள்  நிலவுவதாக  ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன

ஒரு காலத்தில் “தென்னாசியாவின் டெக் ஹப்” என்று பெருமையாக பேசப்பட்ட சென்னை கூட,இந்த பட்டியலில் இடம் பெறாதது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அது தமிழக நிர்வாகத்தின் குறைபாடே காரணம். குறிப்பாக  போக்குவரத்து, பாதுகாப்பு, சாலை தரம், தூய்மை, சட்டம்–ஒழுங்கில் பின்னோக்கி செல்கிறது. வெறும் விளம்பரங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது திராவிட மாடல் ஆட்சி. 

மாநிலத்தின் மற்ற நகரங்கள்—கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி—இதிலும் இடம் பெறாதது, நகர வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித நிலைப்பாடில் உள்ளன என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த நிலைமை மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சிறந்த நகரம் என்றால் தான் தொழில் முதலீடுகள் உள்ளே வரும் இல்லை என்றால் எப்படி உள்ளே வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  

அடிப்படை வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கட்டமைப்பு திட்டங்கள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும்? உலகத் தரத்தில் நகரங்களை உருவாக்கும் திட்டமிடல் எப்போது தொடங்கும்?என்ற கேள்விகள் அதிகரித்திருக்கின்றன.

1996-ல் பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தத்துக்குப் பின் நடைபெற்ற அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், ‘மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்’ என்ற பெருமையைப் பெற்றார் மு.க. ஸ்டாலின். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கும் ஸ்டாலின், 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, சென்னையை அழகுபடுத்தும் விதமாக, ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தைக் கொண்டுவந்தார். அது என்ன ஆனது  சிறந்த நகரங்களுள் வர முடியவில்லை  மேலும் அடையாறை  சுத்தப்படுத்த 4800 கோடி செலவு செய்தார்கள்.என்ன ஆனது.என்ற கேள்விகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது.  

இதுமட்டுமா பழமையான தொன்மையான நகரமான மதுரை குப்பை நகரகமாக மாறியுள்ளது. இந்தியாவில் எந்த மாநகராட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிகப் பெரிய ரூ.200 கோடி வரி முறைகேடு மதுரையில்தான் நடந்துள்ளது. விஞ்ஞான முறையிலான ஊழலிலும், தூய்மைக் கேட்டிலும் முன்னணியில் உள்ளது மதுரை மாநகராட்சி தான். மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷான் 2025 அறிக்கை இந்தியாவின் அழுக்கடைந்த நகரங்களுள்முதன்மையானதாக மதுரையை பட்டியலிட்டு அதிர்ச்சியளித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்ட மாமதுரையை சீரழித்துள்ளது திராவிட மாடல் ஆட்சி