சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் ரேஸ் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.240 கோடி தொகை ஒதுக்கியுள்ளது. இந்த விளையாட்டை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்? எதற்காக இந்த ரேஸ்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேஸ் மூலம் மக்களுக்கு ஒரு நியாயம் அரசுக்கு ஒரு நியாயமா என்ற கேள்வியும் வலுத்து வருகிறது.
உலக செஸ் ஒலிம்பியாட், சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, சர்வதேச அலை சறுக்கு போட்டி என அடுத்தடுத்து உலக அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது ஃபார்முலா 4 கார் ரேஸும் சென்னையில் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது.பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டிக்காக 240 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த ரேஸுக்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர், ரேஸ் நடத்துவதற்கு என்று தனியிடம் உள்ள போது பொதுமக்கள் நடக்கும் பாதையில் இந்த போட்டியை நடத்துவது ஏற்றுகொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மருத்துவமனைகள் அருகில் இருப்பதால் மருத்துவ நோயாளிகளுக்கு பதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் எந் பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது என்று வாதாடினார் வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்து. இப்போது சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவென்றால் சமீபத்தில் சென்னையில் 60கிமீ வேகத்தில் வாகனங்கள் இயக்க கூடாது என்று கட்டப்பட்டு விதித்தது ஆனால் அரசு நடத்தும் ரேஸில் வாகனம் செல்லும் வேகமானது சுமார் 220 கிமீ வேகத்தில் செல்லும் இதற்கு யார் அனுமதி கொடுத்தார்? 12 கார் பயங்கர சத்தத்துடன் செல்வதால் சாலையின் அருகில் மருத்துவமனை இருப்பதால் இதய நோயாளியின் அங்கு தான் இருக்கிறார்கள் அவர்களை இந்த அரசு உயிராக கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த கார் தார்சாலையில் செல்லுமா அதற்கென்று உருவாக்கப்பட்ட சாலையில் தான் அதனை இயக்க வேண்டும் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என பல கேள்விகளை முன் வைக்கின்றனர்.
துணை முதல்வராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்யாமல் விளையாட்டு பிள்ளையாக கார் ரேஸ் விட்டு கொண்டு இருக்கிறார். இவர் நாளைக்கு முதலமைச்சர் ஆகி என்ன நல்லது பண்ணுவார் என்று எப்படி நம்புவார்கள் என கூறப்படுகிறது. தற்போது திமுக மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை மறைக்கவே அரசு இது போல் கார் ரேஸ், இளைஞரணி மாநாடு எல்லாம் கண் மூடி வித்தை என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை அரசு 5000 ஆயிரத்திற்கு மேல் விற்று மக்களிடம் கொள்ளையடிப்பதாகவும் கூறப்படுகிறது.