24 special

அனைத்திற்கும் தயாரான அண்ணாமலை காவிகளுக்கு பறந்த மெசேஜ்...!

EPs, annaamalai
EPs, annaamalai

அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களுக்கு விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்த அதிமுக தரப்பு பாஜக அதிமுக கூட்டணி நிகழாத வண்ணம் சில செயல்களை செய்தது. மேலும் அண்ணாமலையை தமிழக தலைமையில் இருந்து மாற்ற வேண்டும் அப்படி மாற்றினால் அதிமுக பாஜக கூட்டணி நிகழும் என்ற கருத்து அதிமுக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட போதும் டெல்லி தலைமை அதற்கு உடன்படாமல் பாஜகவிற்கு அண்ணாமலை முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியது. 



இதன் காரணமாக இனி அண்ணாமலையை தமிழக தலைமை பதவியில் இருந்து மாற்ற முடியாது என தெரிந்த அதிமுகவினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இந்த நிலையில் அண்ணாமலை அவர்கள் நடைப்பயணத்தில் பேசும்போது, 'அரசியல் களம் என்றாலே மாற்றத்தை கண்டு கொண்டிருக்கும் ஒரு களம், மேலும் அரசியல் மாற வேண்டும் என்று விரும்புகின்ற மக்களையும் தற்போது இந்த நடைபயணத்தில் நாம் பார்த்து விட்டோம் அதிக பேரை எதிர்கொண்டு நாம் மேலே வரவேண்டிய காலகட்டம் மற்றும் சவாலான காலகட்டம் தான்! எத்தனை பேரையோ பார்த்து விட்டோம் பரவாயில்லை இவர்களையும் பார்க்கலாம் அவை எல்லாவற்றையும் சமாளித்து மக்களின் ஆசையை நிறைவேற்றுவோம். அதாவது இத்தனை மக்களின் நம்பிக்கையை பார்த்த பிறகும் அவர்கள் நம்பிக்கை அனைத்தும் பாஜக மீது உள்ளது என்பதை தெரிந்த பிறகும் ஒரு மாநில தலைவராக இருந்து கொண்டு எனது வேலையை நான் செய்யவில்லை என்றால் மக்கள் நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவனாக இல்லாமல் போய்விடும். இதற்கு முன்பாக உங்களது நம்பிக்கை அனைத்தும் என்னிடம் முழுமையாக வந்து சேராமல் இருந்தது ஆனால் தற்பொழுது உங்கள் அனைவரையும் நேரடியாக கண்டு வருகிறேன் அதனால் நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை அனைத்தையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு இனி சந்திக்க வேண்டிய சில சவால்களையும் சந்தித்து இடர்பாடுகளையும் தாண்டி சில நிலைபாடுகளில் இருக்க வேண்டும் அப்படி நிலையான நிலைப்பாட்டிற்கு வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் சிலரை எதிர்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது அதற்காக தனி மனிதனாக நான் தயாராகி விட்டேன், மேலும் பாஜகவும் அதற்காக தயாராகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஏனென்றால் அரசியலில் மாற்றம் என்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும், என்று மறைமுகமாக அதிமுக பாஜக இடையே கூட்டணி இல்லாமலும் தனியாக எதிர்கொள்ளப் தயார் என்பதை தெரிவித்தார். 


மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை மறைமுக அசைன்மென்ட்ளையும் கொடுத்துள்ளாராம், அதாவது தங்கள் ஏரியாவில் களப்பணிகளை இப்பொழுது இருந்தே முழு மூச்சில் தொடங்குங்கள், இன்னும் சில காலத்தில் தேர்தல் வர இருப்பதால் மிக வேகமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நடைப்பயணம் வரும் பொழுது அந்தந்த ஏரியாவில் இருக்கக்கூடிய முக்கியமான நபர்களை நான் சந்திப்பேன், அடுத்த ஐந்து மாதங்களும் தேர்தல் வேலைகள் தான் நடைபெற வேண்டுமென காவிகளுக்கு கட்டளை பறந்துள்ளதாகவும், மேலும் சில மாஸ்டர் பிளான் உடன் அண்ணாமலை இந்த அறிவிப்பை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் கள அளவில் தேர்தல் வேலைகளை பாஜகவினர் இப்பொழுதே துவங்க வேண்டும் எனவும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பிரதம மந்திரியின் திட்டங்களில் பயனாளர்கள் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் களத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனவும் கட்டளை பறந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இது மட்டும் அல்லாமல் பிற கட்சிகள் இனி கூட்டணி, வேட்பாளர் என முடிவு செய்துதான் களத்தில் இறங்குவார்கள் நம்மை பொருத்தவரை நம் அனைவருமே வேட்பாளர்கள் தான் நமக்கு ஒரே ஒரு எண்ணம்தான் அது மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் அமர வேண்டும் அது மட்டும் தான்! அடுத்த தலைமுறைக்காக இப்பொழுது நாம் உழைக்க தயாராக வேண்டும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை அழையுங்கள் நான் இருக்கிறேன் என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.