24 special

அமலாக்கத்துறையிடம் சிக்கும் அதிமுக தலைவர்கள்..இதற்குமேல் வருந்தி புரோஜனம் இல்லை..!

EPs, enforcement
EPs, enforcement

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அதிமுக- பாஜக பனிப்போர் நேற்று இறுதி முடிவை எட்டியது. இதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியை பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று, அதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வந்த பிறகு அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் கலசலப்பு ஏற்பட தொடங்கியது. பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாவை விமர்சித்தது பெரும் பூதாகரமாக அதிமுக கட்சியினரிடேயே கோபத்தை உண்டாக்கியது. தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை மற்றும் பாஜக மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தினார். தொடர்ச்சியாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஐவர் குழு டெல்லி தலைமையை சந்தித்து அண்ணாமலையை மாற்றினால் நாம் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என ஆலோசனை கூறியது, இதற்கு பாஜக தலைமை சமாதான பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க அந்த ஐவர் குழு தமிழ்நாடு திரும்பினர்.

நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுடன்-பாஜக கூட்டணி இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவுடன் கூட்டணி இன்றைக்கும் இல்லை: என்றைக்கும் இல்லை என அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். இந்த முடிவு மூலம்  பல கட்சி தலைவர்களும் சரியான முடிவை தான் அதிமுக எடுத்திருக்கிறது என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதைப்பற்றி பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கருத்துக்களை கேட்க அமைதியாக இருங்கள், எங்களது தேசிய தலைவர்கள் இது குறித்து கூடிய விரைவில் பதிலளிப்பார் என தெரிவித்து கடந்து சென்றார். பாஜக தலைமை இதற்கு சிறிதும் செவி சாய்க்காமல் வரவிருக்கும் தேர்தலில் நமது தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைக்க ஆலோசிக்க தொடங்கியுள்ளதாம். 

இன்று அதிமுக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, "பொதுவெளியில் பிஜேபி-யை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும், தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது" எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கூட்டணி இல்லை என தெரிவித்த பின்பு எடப்பாடியர் வருந்துகிறாராம் என்னதான் கூட்டணியில் புதிய கட்சிகள்  இணைந்தாலும், தேசிய கட்சியுடன் உறவை முறித்ததற்கு என்ன செய்வது என்று அறியாமல் கவலைப்படுகிறாராம்.

இப்படி அதிமுகவினர் பம்புவதற்கு கரணம் என்ன வென்றால் திமுகவை தொடர்ந்து, அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையிடம் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக அண்ணாமலை 2024ம் ஆண்டு ததேர்தலுக்குள் அனைத்து கட்சி ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொடநாடு வழக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கிலும், தங்கமணி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பல தலைவர்கள் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்து வெளியில் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே அடுத்த ஆப்பு அதிமுகவுக்கு தான் என கருத்துக்களை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.