24 special

திமுக இளைஞர் அணி செய்த செயலாளர் வாயடைத்து போன திமுக....!

Udhayanidhi,
Udhayanidhi,

கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். மாலை நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கிருஷ்ணகிரி தேவராஜ் மஹால் அருகில் நடந்தது.


இதில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி எழுச்சி குறித்தும், சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாடு குறித்தும் ஆவேசமாக பேசினார். ஆர்வத்துடன் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர், அவரது பேச்சை கேட்டபோதிலும் அமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்களுடன் இருந்த வாழை மரத்திலும், கரும்பு கட்டுகளிலும் கண்ணாக இருந்தனர்.

அப்போது சில இளைஞர்கள், வாழைத்தார்களை உருவி தாங்கள் வாகனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதை பார்த்த மற்றவர்களும் நாம் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும் என கூறி அவர்களும் கையில் கிடைத்த வாழைத்தார்களை சரசரவென பிய்த்து எடுத்து சென்றனர்.

வாழைத்தார்களை அடுத்தடுத்து வேட்டையாடிய திமுக இளைஞரணியினரை  கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திகைத்தனர். இதை கவனித்த கலால் இன்ஸ்பெக்டர் கிரிஜா ராணி மற்றும் போலீசார் வாழைத்தாரை ஏம்ப்பா எடுக்குறீங்க போங்க என  அனைவரையும் லத்தியுடன் வந்து விரட்டி அடித்தார். அதையெல்லாம் பொருட்படுத்தாத இளைஞரணி திமுகவினர் சிரித்தபடியே வாழ்த்தார்களை பிய்த்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தொண்டன் நினைத்தால் பாஜகவை தமிழகத்தில் பிய்த்து மேய்ந்து விடுவான் என உதயநிதி வசனம் பேசி கொண்டு இருக்க, திமுக தொண்டர்களோ வாழை காயை பிய்த்து கொண்டு போனது கடும் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த வீடியோ பாஜகவினர் கண்ணில் பட்டால் என்ன நினைப்பான்  என்ற கேள்வி தான் தற்போது திமுகவினர் வட்டத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.